Drinking tea: தேநீர் குடித்ததும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்குத் தான்!
உணவிற்கு முக்கியத்துவம் தருவதைக் காட்டிலும் தேநீருக்கே அதிகளவில் முக்கியத்தும் கொடுத்து வருகின்றனர். நம்மில் சிலர் தேநீர் குடித்த பிறகு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறான செயல் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்க கூடுமாம்.
நாம் சோர்வாக இருக்கும் போது முதலில் ஞாபகத்திற்கு வருவது டீ, காஃபி தான். டீ, காஃபி குடித்த உடனேயே நம் உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாகி விடுவோம். இன்றைய காலகட்டத்தில் டீ, காஃபியை அனைத்து வயதினரும் விரும்பி குடிக்கிறார்கள். நம் நாட்டில் பெரும்பாலான மனிதர்கள் தேநீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். உணவிற்கு முக்கியத்துவம் தருவதைக் காட்டிலும் தேநீருக்கே அதிகளவில் முக்கியத்தும் கொடுத்து வருகின்றனர். நம்மில் சிலர் தேநீர் குடித்த பிறகு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறான செயல் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்க கூடுமாம்.
தேநீருக்குப் பின் தண்ணீர் குடிக்கும் பழக்கம்
பொதுவாக தேநீர் குடிப்பதற்கு முன்பாக குறைந்தது 15 நிமிடங்கள் முன்னதாகவே தண்ணீர் குடிக்க வேண்டும். இது தான் உடல் நலத்திற்கு நல்லதும் கூட. ஆனால், சிலர் தேநீர் குடித்த பிறகு தான் தண்ணீரைக் குடிக்கின்றனர். இப்பழக்கம் நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். தேநீர் குடித்த பிறகு தண்ணீர் குடிப்பதால், என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை இப்போது அறிந்து கொள்வோம்.
Coconut shell: தலைமுடியை கருமையாக்கும் தேங்காய் மட்டை: எப்படித் தெரியுமா?
பக்க விளைவுகள்
- அடிக்கடி தேநீர் குடிக்கும் பொழுது, அதிகமாக தண்ணீர் தாகம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஒரு கப் டீ-யில் 50 மி.கி காஃபின் இருப்பதால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது.
- சூடான உணவை உட்கொண்ட பிறகு, குளிர்ந்த உணவை சாப்பிட்டால் தொண்டை மற்றும் உணவுக்குழாய் பாதிப்படையும். மேலும் பற்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு, கூச்சம் ஏற்படுகிறது.
- தேநீர் குடித்ததும் வயிற்றில் வாயு வெளியேறும் காரணத்தால், தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், இது வயிற்றில் புண்களை ஏற்படுத்தும் என்பதை மறந்து விட வேண்டாம்.
- கோடை காலங்களில் தண்ணீர் குடித்து விட்டு உடனேயே, டீ குடித்தால் மூக்கில் இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
- தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், இப்பழக்கத்தை கொண்டிருந்தால் இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில், பின்னாளில் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.