Asianet News TamilAsianet News Tamil

தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; தீமைகள்- ஒரு அலசல்..!!

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி சர்வதேசளவில் தேநீர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடும், அதனுடைய பண்பாட்டுக்கு ஏற்றவாறு தேநீர் பயன்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்தியளவில் தேநீர் ஒரு உற்சாக பானமாக திகழ்கிறது. காலை வேலையில் பால், சர்க்கரையுடன் தயாரிக்கப்படும் தேநீரை குடிக்கவில்லை என்றால் அன்று பலருக்கும் வேலையே ஓடாது. அதேசமயத்தில் நம்மில் பலர் பிளாக் டீ குடிப்பதும் உண்டு. தேநீர் தூளுடன் சூடான தண்ணீர் விட்டு தயாரிக்கப்பட்டும் இந்த பிளாக் டீ-யை குடிக்கும் போது இருதய நோய்கள், டிமென்ஷியா மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் வரமால் தவிர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் உடலில் அழற்சியை குறைக்கிறது. தேநீர் குடிப்பதன் மூலம் மூளை மிகுந்த செயல்பாட்டுடன் இருக்கும். அதேசமயம் மிகவும் சூடாக இருக்கும் தேநீரை குடிக்கும்போது உணவுக்குழாயின் வெப்ப காயத்தை உருவாக்கி, நாளிடைவில் அது புற்றுநோயாக மாறும் அபாயமும் உள்ளது. அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய தேநீரை மட்டுமே உணவாக நினைத்துக் கொண்டு குடிப்பவர்களும் உண்டு. அதிகளவில் தேநீர் குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து பார்க்கலாம்.
 

these are things you have to blame for drinking tea daily
Author
First Published Sep 27, 2022, 11:56 AM IST

உடல் நடுக்கம்

நீண்ட நாட்களாக காஃபியை அருந்தி வருபவர்களுக்கு, வயது முதிர்வு ஏற்படும் போது ஒருவித நடுக்கம் ஏற்படும் என்று தெரியும். உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலும், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்னை அதிகளவில் தேநீர் குடிப்பவர்களுக்கும் ஏற்படுகிறது. அதற்கு தேநீர் தூளிலும் காஃபைன் இருப்பதே முக்கிய காரணம். அதனால் முடிந்தவரை டீயை அளவுடன் பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகமாக எடுத்துக்கொள்வதாக இருந்தால், உடலில் பதற்றம், சோர்வு உணர்வு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.

தூக்கமின்மை பிரச்னை

இயற்கையாகவே தேநீரில் காஃபைன் இருப்பதால், அதை அதிகளவில் உட்கொள்வது உங்களுடைய தூக்கச் சங்கலியை பாதிக்க தொடங்கும். நம் மூளைக்கு உறங்க வேண்டும் என்பதை உணர்த்துகிற ஹார்மோன் தான் மெலடோனின். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், காஃபின் மெலடோனின் செயல்பாட்டை தடுப்பது தெரியவந்துள்ளது. இதனால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போதிய தூக்கம் கிடைக்காமல் போகும் நிலையில், அது உடல் சோர்வு, நினைவார்றல் குறைபாடு, கவனத்தை குறைக்கும் திறன் உள்ளிட்ட மனநல பிரச்னைகளை உண்டாக்கிவிடும்.

அமில பிரச்னை

மிதமஞ்சிய அளவில் டீ குடிப்பது அல்லது வெறும் வயிற்றில் டீ அருந்துவது எதுக்களித்தல் பிரச்னையை உருவாக்கும். இதனால் வயிற்றுள்ள அமிலத்தின் செயல்பாடு அதிகரித்து, வயிற்றில் எரிச்சல் ஏற்படும். 
தேநீர் சரியாக காய்ச்சப்படாவிட்டாலோ அல்லது சூடாகமாடாமல் இருந்தாலோ அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். இதனால் எதுகளித்தல் ஏற்படும். தேநீர் இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது என்பதால், அதை உட்கொள்ளும் போது வயிறு சார்ந்த பிரச்னை எதுவும் இல்லாமல் இருப்பது நன்மையை தரும்.

பிரசவத்துக்கு பிறகு எப்போது தம்பதிகள் உறவில் ஈடுபடலாம்..?? மருத்துவர்கள் கூறுவது இதுதான்..!!

தேநீருக்கு அடிமையாதல்

நமது உடல் காஃபைனை எளிதாக உள்ளிழுத்துக்கொள்ளும். இதன்காரணமாக மூளையில் ஏதாவது பிரச்னை ஏற்படும். காஃபின் ஒரு தூண்டுதலாகக் கருதப்படாவிட்டாலும், அது நமது மூளையில் சில செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் மூளை கூடுதலாக டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட வழிவகுக்கும். அதனால் தேநீரை சார்ந்திருக்கும் அளவுக்கு செல்லாமல், அதை நாம் அளவுடன் குடிக்க பழகிக்கொள்ள வேண்டும். உடனடியாக விட்டுவிட்டாலும் பயனில்லாமல் போய்விடும். அதனால் நீங்கள் தேநீரை சார்ந்திருந்தால், படிப்படியாக அந்த பழக்கத்தை கட்டுப்படுத்த பழக்கிக்கொள்ளுங்கள்.

நல்லவிதமாக மரணம் சம்பவிக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

தலைவலி

தேநீரில் காஃபைன் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்தும். ஒரு நாளில் பலமுறை டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், காஃபைன் இருப்பதன் காரணத்திற்காகவே தலைவலியை நீடித்து இருக்கும். அதிக டீ குடிப்பதால், காஃபின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. அதன்காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது. தேநீர் குடிப்பதை நிறுத்தினால் மட்டுமே, மீண்டும் ரத்த நாளங்கள் விரிவடைந்து தலைவலி விடுபடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios