Asianet News TamilAsianet News Tamil

நல்லவிதமாக மரணம் சம்பவிக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒரு மனிதர் இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில், அவர் வாழ்ந்ததற்கான மரியாதையை நாம் செய்ய வேண்டும். அதன்மூலம் மரணத்தின் விளிம்பில் இருப்பவருக்கு அமைதியான முறையில் மரணம் ஏற்படும். 
 

this we have to do to have peaceful death at our life ends
Author
First Published Sep 24, 2022, 11:30 AM IST

உலகத்தில் பிறக்கும் உயிர்கள் என்றைக்காவது ஒருநாள் விடைப்பெற்று தான் ஆகவேண்டும். ஆனால் அந்த நிகழ்வு எப்படி ஏற்படுகிறது என்பது கணிக்க முடியாது. இது மனிதன் உட்பட அனைத்து உயிர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான். ஆனால் மரணத்தை குறித்து நமக்கான சிந்தனை, இன்னொரு மரணம் சம்பவிக்கும் போதோ அல்லது வயோதிக காலத்திலோ தான் ஏற்படுகிறது. அப்போது அது எப்படிப்பட்ட மரணமாக நிகழ்கிறது என்பதை பொறுத்து நமது சிந்தனை மாறுபடுகிறது. 

உலகெங்கும் வசிக்கும் மக்கள் பலர் அமைதியான வழியில் மரணமடைவதை தான் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் கண்முன் ஏற்படும் திடீர் மரணங்கள் அல்லது வேண்டப்பட்டோரின் உயிரிழப்புகள் அவர்களை அச்சமடையச் செய்துவிடுகின்றன. ஆகால மரணங்கள் குறித்து நாம் கணிக்க முடியாது என்பதால், இயற்கையான முறையில் ஏற்படும் மரணங்கள் நல்ல முறையில் நிகழ்வதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடலை விட்டு உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் நபருக்கு அருகில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைக்கலாம். இதை 24 மணிநேரமும் எரியும் விதமாக நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் பிரகாசம், மரணத்தின் கொந்தளிப்பை கட்டுப்படுத்தும். மேலும் மந்திர உட்சாடனையை கொண்ட சி.டிக்கள் அல்லது பாடல்களை ஒலிக்க விடலாம். இதுவும், அமைதியான வகையில் மரணம் ஏற்பட வழிவகுக்கும்.

Bad Dreams : கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க இந்த சின்ன பரிகாரம் செய்யுங்க!

மரணம் மருத்துவரீதியாக நிகழ்ந்திருந்தாலும், இந்த அண்டத்தை பொறுத்தவரை ஒரு உயிர் 14 நாட்களுக்கு பிறகு தான் முழுமையாக விடை பெறுகிறது. ஒருவர் இறந்த பின்னும் 11 நாட்கள் வரை, அவருடைய முடி மற்றும் நகங்கள் வளரும். அதன்காரணமாகவே நமது இந்திய கலாச்சாரத்தில் ஒருவர் இறந்து, அவருடைய உடலை எரியூட்டிய பின் அல்லது அடக்கம் செய்த பின்,  14 நாட்களுக்குள் பல்வேறு சடங்குகள் நடத்தப்படுகின்றன. இது மரணமடைந்தவர்களை திருப்தி அடையச் செய்வதற்காக செய்யக்கூடிய நடைமுறைகளாக உள்ளன.

சிவன் சுடுகாட்டில் ஆடுகிறார்' என்பதற்கு பின் இருக்கும் உண்மை

உங்களுடைய எதிரி அல்லது வேண்டாதவர் இறந்துபோனால் கூட, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அப்போது எந்தவிதமான தவறான செயல்களையும் நீங்கள் செய்யக்கூட்டாது என்பது பெரியவர்கள் வாக்கு. ஏதேனும் இறப்பு நிகழ்ந்தவரின் வீட்டை, நீங்கள் கடந்து செல்கையில் இறந்தவர்களின் ஆன்மா அமைதியை பெற வேண்டும் என்று பிராதித்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய பண்பை உயர்த்திக் காட்டும். 

வேண்டப்படுபவரோ அல்லது வேண்டாதாவரோ ஒருவர் இறந்துபோனால் அவர் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மறைந்தவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது முக்கியமில்லை. ஆனால் இந்த உலகத்தை விட்டு அவர்கள் விடை பெறும் போது, நிச்சயமாக அவர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பது முன்னோர் வகுத்த நீதி.

Follow Us:
Download App:
  • android
  • ios