Asianet News TamilAsianet News Tamil

சிவன் சுடுகாட்டில் ஆடுகிறார்' என்பதற்கு பின் இருக்கும் உண்மை

மயானம் சுடுகாடு என்பது அச்சத்தை அளிக்கும் இடம். அந்த பக்கமே செல்லாமல் தவிர்க்கவே எல்லாரும் நினைப்போம். ஆனால்  அந்த இடத்தில் அமர்ந்துகொண்டவர் ஈசன்.
 

The truth behind the joke of Shiva dancing in the fire pit
Author
First Published Sep 23, 2022, 5:54 PM IST

மயானத்தை  காயந்த்த என்று அழைப்பார்கள். காயா என்றால் உடல் அந்த்த என்றால் முடிவு. உடல் முடியும் இடம்.  இதை ஜீவந்த்த என்று சொல்லாமல் காயந்த  என்றே சொல்கிறார்கள்.  உயிர் முடியும் இடம் அல்ல உடல்  மட்டும் முடிவுறும் இடம்.  நீங்கள் உடலாய் இந்த மண்ணில் வளர்ந்து இங்கிருந்த எடுத்த அனைத்தையும் விட்டுவிடும் இடம் என்று பொருள். அதனால் தான்  வாழ்வை முழுமையாக உணர எண்ணிய சிவன்  மயானத்தில் அமர்ந்தார். 

 சிவனின் உருவத்தை வைத்து பலரும் வேடிக்கையாக பேசிவருவது வழக்கம். அதிலும் ஒரு சிலர் சிவனை சுடுகாட்டில் ஆடிக் கொண்டிருக்கும் பித்தன் என்று கேலி செய்வதை நாம் பார்த்திருப்போம். இதனை சிவ பக்தர்கள் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றாலும் இந்த கருத்தினை அவர்களால் மறுத்தும் பேச முடியாமல் தவித்து வருவார்கள். ஏன் என்றால் அவர் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருப்பவர் தான். ஆனால் அவர் சுடுகாட்டில் ஆடுவது மனிதப்பிறவிகளான நம்முடைய  நலனுக்காக தான் என்பதை அறிய சிலர் மறந்து விடுகின்றனர்.

வீட்டில் கண்ணாடி உடைந்தால் துர்சம்பவம் உண்டாகுமா ?

பொதுவாகவே உடலும் உயிரும் சேர்ந்தால் தான் அதை உயிரினம் என்று அழைக்கிறோம். உடலை விட்டு உயிர் பிரிந்து விட்ட அடுத்த நொடியே உடலை பிணமென்று தான் அழைப்பர்.  இந்த பிணத்தை இரண்டு நாட்களுக்கு மேல் யாரும் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உடலை விட்டு பிரிந்த நம் உயிருக்கு அப்படி இல்லை. நம் உயிரானது நமது உடலை எப்போதும் நேசித்துக் கொண்டே தான் இருக்கும்.

உதாரணத்திற்கு, நாம் ஒரு வீட்டில் ஒரு வருடம் குடி இருந்தால் கூட அந்த வீட்டை விட்டு வெளியேறும் போதும் நமது மனம் எப்படி பதை பதைக்கும். அதே பதைபதைப்பு தான் இறந்தவரின் ஆன்மாவிற்கும் அவரது உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யும் போது இருக்கும். இத்தனை வருடங்களாக நாம் பேணிக்காத்த நமது உடலை இப்படி எரிக்கிறார்களே என்று ஆன்மா பரிதவிக்கும் போது அந்த ஆன்மாவிற்கு ஆறுதல் அளித்து அடைக்கலம் தருவது அந்த பரமசிவன் தான்.

தேங்காய் அழுகினால் அபசகுணமா.. கெட்டது நடக்கும் அறிகுறியா?

எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரஞ்சோதி நாம் இறந்த பிறகும் நம்மை காத்து ரட்சிக்க சுடுகாட்டிலும் இருக்கிறார். உயிரானது உடலை விட்டு பிறந்தாலும் நம்மை விட்டு எப்போதும் பிரியாது நம் ஆன்மாவை காத்து ரட்சிக்கும் அந்த ஈசனை இனியாவது கேலிசெய்வதை நிறுத்தி, நமக்கான அனைத்து நலன்களையும் புரியும் அவரை போற்றுவதே இந்த மானிட பிறப்பின் பாக்கியமாக கருதுவோம்.

Follow Us:
Download App:
  • android
  • ios