Asianet News TamilAsianet News Tamil

Egg: முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் இவை தான்!

முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என பல ஆராய்ச்சி முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதில் முட்டை சிறப்பாக செயல்படுகிறது.

These are the foods that should not be eaten with eggs!
Author
First Published Nov 4, 2022, 8:28 PM IST

ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்கும் முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை அள்ளிக் கொடுப்பதுடன், உடலுக்குத் தேவையான புரதச்சத்து மற்றும் இயற்கையான கொழுப்புச்சத்தும் முட்டையில் தேவையான அளவு கிடைக்கிறது. மேலும், முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என பல ஆராய்ச்சி முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான செல்களை உருவாக்குவதில் முட்டை சிறப்பாக செயல்படுகிறது.

முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள்:

முட்டை மிகந்த சத்துக்கள் நிறைந்த உணவாக இருந்தாலும், முட்டை சாப்பிட்ட பின்னர், என்ன சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. சில குறிப்பிட்ட உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அந்த உணவுகள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

வாழைப்பழம்

முட்டையை சாப்பிட்ட உடனேயே வாழைப்பழத்தை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், இவை இரண்டும் வயிற்றின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும்.

மீன்

முட்டை மற்றும் மீனை ஒன்றாக சேர்த்தும், ஒன்றன் பின் ஒன்றாகவும் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், தோல் வெடிப்புகள் ஏற்பட்டு விடும். இது, புரத ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

பன்னீர்

பன்னீர் மற்றும் முட்டை ஆகிய இரண்டையும் கலந்து அல்லது ஸ்பெஷல் ரெசிபி போல செய்து பலரும் சாப்பிடுகிறார்கள். பன்னீர் மற்றும் முட்டை இவை இரண்டும் கலந்த கலவை ஆரோக்கியமானது அல்ல. இவையிரண்டும் சேர்ந்தால், செரிமான அமைப்பையே சேதப்படுத்தி விடும்.

Potato Cheese Omelette : ஆம்லெட் டை இப்படி செய்து கொடுங்க. எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!

எலுமிச்சை

முட்டை சமைக்கும் சமயத்தில் சிலர் எலுமிச்சை சாற்றை சேர்த்து விடுவார்கள். முட்டையில் இருக்கும் கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஆகிய இரண்டும் சேரும் போது உண்டாகும் எதிர்வினை, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடும்.

தினந்தோறும் 2 முட்டைகளை சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையை அளிக்கும். இதை விடவும் அதிகமாக சாப்பிட விரும்பினால் மருத்துவரை கலந்தாலோசித்து தான் சாப்பிட வேண்டும். அதிகளவு உடற்பயிற்சி செய்பவர்கள் மட்டும், முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios