Asianet News TamilAsianet News Tamil

Potato Cheese Omelette : ஆம்லெட் டை இப்படி செய்து கொடுங்க. எத்தனை சாப்பிட்டோம் என்றே தெரியாது!

பொட்டேட்டோ சீஸ் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
 

How to make Potato Cheese Omelette in Tamil
Author
First Published Nov 4, 2022, 12:25 PM IST

நம்மில் பலரும் முட்டையை அவித்தோ, பொடிமாசாகவோ, ஹாஃப் பாயிலாகவோ செய்து தான் சாப்பிட்டு இருப்போம். கொஞ்சம் ஒரு சேஞ்சுக்கு முட்டையுடன் உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் சேர்த்து ஆம்லெட் செய்வோமா? பொட்டேட்டோ சீஸ் ஆம்லெட். இப்படி செய்து கொடுத்தால் கிட்சனை விட்டு யாரும் நகராமல் அங்கேயே நின்று சாப்பிட்டு விட்டு ,மறுமுறைக்காக காத்துக் கிடந்து சாப்பிடுவார்கள். அவ்ளோ ருசியான இந்த ரெசிபியை அப்படி செய்யலாம். பார்க்கலாம் வாங்க!.

இதனை சீஸ் சேர்த்து செய்வதால், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வழக்கமாக செய்கின்ற ஆம்லெட்டை விட இதன் சுவை சூப்பராக இருப்பதால் இதனை அடைக்கடை செய்து தரும் படி குழந்தைகள் அன்புக்கு கட்டளை இடுவார்கள். இந்த பொட்டேட்டோ சீஸ் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

தேவையான பொருட்கள்:
  
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 1
துருவிய சீஸ் - 2 
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
கரம் மசாலா தூள் -1 ஸ்பூன்
மிளகு தூள் - தேவையான அளவு 
 மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு 

டீ டைம் ஸ்னாக்ஸ் உடன் ''அடை மாவு பக்கோடா'' செய்யலாமா ?

செய்முறை:

வெங்காயத்தை மெல்லிதாக,  நீட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கினை தோல் சீவி  சிறு துண்டுகளாக வெட்டி உப்பு தூவி பிரட்டிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடான பின் வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கொண்டு ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதே பானில் , மீண்டும் சிறிது எண்ணெய் சேர்த்து , எண்ணெய்  காய்ந்த பின் உருளைக் கிழங்கு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்துக் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி , நன்கு பீட் செய்து கொண்டு, பொறித்த உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் துருவிய சீஸ் , மிளகுத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பான் வைத்து, சிறிது எண்ணெய் தேய்த்து, முட்டை கலவையினை ஆம்லெட்டாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு, ஒரு தட்டு போட்டு மூடி வைத்து வேக விட வேண்டும். 

ஆம்லெட் ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் வேக வைக்க நிதானமாக திருப்பி போட வேண்டும். 

இரண்டு பக்கமும் வெந்த பின் இறக்கி விட்டு, சுட சுட பரிமாறுங்கள். அவ்ளோதான், சூப்பரான பொட்டேட்டோ சீஸ் ஆம்லெட் ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios