Asianet News TamilAsianet News Tamil

டீ டைம் ஸ்னாக்ஸ் உடன் ''அடை மாவு பக்கோடா'' செய்யலாமா?

அடை மாவினை வைத்து பக்கோடாவை க்ரிஸ்பியாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தட்டில் மிச்சம் வைக்காமல் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்

How to make Adai maavu Pakoda in Tamil
Author
First Published Nov 2, 2022, 6:47 PM IST

தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய தொடங்கி விட்டது. இப்படி கொட்டும் மழையில் சூடான டீயுடன் அல்லது காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் சாப்பிட கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்?

வழக்கமாக மாலை நேரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா என்று தான் சாப்பிடுவோம். பக்கோடா சாப்பிட்டு இருக்கிறீர்களா? பக்கோடாவில் என்ன ஸ்பெஷல் ? என்று கேட்கறீர்களா? பொதுவாக பக்கோடாவை கடலை மாவு மற்றும் வெங்காயம் சேர்த்து தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சற்று மாற்றமாக அடை மாவினை கொண்டு பக்கோடா செய்யலாமா? 

இப்படி அடை மாவினை வைத்து பக்கோடாவை க்ரிஸ்பியாக செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தட்டில் மிச்சம் வைக்காமல் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். 

இந்த அடை மாவு பக்கோடாவினை வீட்டில் எளிமையாக , சுவையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அடை மாவு பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்:

அடைமாவு - 1 கப்
ரவை 1/4 கப்
கேரட் - 1
சோள மாவு-1 ஸ்பூன் 
ரைஸ் பிளார் -1 ஸ்பூன் 
உப்பு- தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

குழந்தைகளுகள் விரும்பி சாப்பிடும் சூப்பரான வெஜ் சூப்! இந்த மாதிரி செய்து குடுங்க!!

செய்முறை:

முதலில் கேரட்டை கழுவி கொண்டு, பின் கேரட்டின் தோல் சீவி துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ரவையை தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்து வைத்துள்ள அடை மாவில் ஊறவைத்து வடிகட்டிய ரவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட வேண்டும். 

இப்போது மாவினில் 1 ஸ்பூன் ரைஸ் பிளார் மற்றும் கார்ன் பிளார் போட்டு மீண்டும் மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, மாவினை கிள்ளி சின்ன சின்ன உருண்டைகளாக போடா வேண்டும்.

அடுப்பின் தீயை சிம்மில் வைத்து , உருண்டைகள் பொன்னிறமாக மாறிய பின்பு திருப்பி போட்டு மறுபக்கமும் பொன்னிறமாக மாறிய பின் எடுத்து எண்ணெயினை வடிகட்டி பரிமாறினால் சுட சுட அடை மாவு பக்கோடா ரெடி!!! 

Follow Us:
Download App:
  • android
  • ios