Asianet News TamilAsianet News Tamil

இரவில் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் ஆஸ்துமா!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

இரவில் சரியாக தூங்காத நபர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

study says irregular sleep cause asthma
Author
First Published Apr 18, 2023, 4:57 PM IST | Last Updated Apr 18, 2023, 4:57 PM IST

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் அத்தியாவசியமானது. சுமார் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. ஒரு நபர் சரியாக தூங்காமல் இருந்தால், அவருடைய மனம் அல்லது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோய், இதய நோய், நினைவாற்றல் செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய உடல் நலப் பிரச்சனைகளுக்கு சரியான தூக்கம் இல்லாதது தான் காரணமாக சொல்லப்படும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பட்டியலில் ஆஸ்துமாவும் இணைந்துள்ளது. சமீபத்திய ஆய்வவின்படி, முறையான தூக்கம் இல்லாத ஒரு நபர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகிறார் என தெரியவந்துள்ளது. 

சீன நாட்டை சேர்ந்த ஷான்டாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் யூகே பயோபேங்க் ஆய்வு தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன. சுமார் 38 முதல் 73 வயதுக்கு உட்பட்ட 4,05,455 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மக்களிடம் தூக்க பழக்கங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது ஆய்வில் மக்களின் தூங்கும் நேரம், குறட்டை, தூக்கமின்மையால் பாதிப்பு, நாள் முழுவதும் தூங்குவார்களா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. இப்படியான கேள்விகளின் அடிப்படையில் கிடைக்கப்பட்ட தரவுகளில், தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறி இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்தது. 

தூக்கமின்மை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரபணு பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதும் கண்டறியப்பட்டது. ஒரு நபர் சரியான தூக்க வழக்கங்களை பின்பற்றி வந்தால், அவர்களுக்கு ஆஸ்துமாவின் அபாயம் குறைவாகவே இருந்துள்ளது. தூக்கமின்மை கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்சனைகளை தடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். 

irregular sleep leads asthma

இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

தூங்குவதற்கு சில டிப்ஸ்!! 

  • தினமும் சரியான நேரத்திற்கு தூங்க செல்வதும், காலையில் முறையான நேரத்தில் எழுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூக்க காலத்தை ஒரே மாதிரியாக பின்பற்றுவது முறையான தூக்கத்தை உங்களுக்கு அளிக்கும். எப்போதும் 10 மணிக்குள்ளாக தூங்குவது நல்லது. பெரியவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் தேவை. குழந்தைகள் 12 மணி நேரம் வரை கூட தூங்கலாம். நீங்கள் சரியான தூக்க பழக்கத்தை பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. 
  • தலையையும், மார்பையும் கொஞ்சம் உயரமாக வைத்து தூங்கினால் அமில வீக்கத்தை தடுக்கும். நல்ல தூக்கம் வரும். 
  • காபின், நிகோடின், அதிகப்படியான உணவு உட்கொள்ளல் தூக்கத்தை பாதிக்கும். அவற்றை குறைத்து கொள்ள வேண்டும். இரவில் மொபைல் போனை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். தூங்க செல்லும் 30 நிமிடங்களுக்கு முன்பு மொபைலை பார்ப்பதை தவிருங்கள். 
  • பகலில் உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். சுவாச பிரச்சனைகள் இருக்காது. இரவில் தூக்கம் நன்றாக வரும். 
  • சிலர் இரவில் தங்கள் கடந்த காலத்தையும், நிகழ்கால பிரச்சனைகளையும் நினைத்து கொண்டிருப்பார்கள். இது தவிர்க்க வேண்டிய விஷயம். நல்ல விஷயங்களை மட்டும் படுக்க செல்லும் முன் நினைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக உறங்க செல்லுங்கள். 

இதையும் படிங்க: டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios