MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?

டாய்லெட்டில் மொபைல் பார்க்கும் பழக்கம்! ஆனா அங்கெல்லாம் போன் கொண்டு போனால், எத்தனை நோய்கள் வரும்னு தெரியுமா?

போன்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் கழிவறைக்கும் போனோடு தான் செல்வார்கள். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கழிப்பறையில் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு பல நோய்கள் ஏற்படுகின்றன. 

2 Min read
Author : maria pani
Published : Apr 18 2023, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கழிப்பறையில் மொபைல் பயன்படுத்துவதால் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதெப்படி என கேள்வி எழுகிறதா? நம் வீட்டு கழிவறையில் தீமை செய்யும் கொடிய நோய்க்கிருமிகள் காணப்படுகின்றன. கழிப்பறை இருக்கைகள் தான் பல வகையான கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது. டாய்லெட் இருக்கையில் உட்காந்து மொபைலௌ நோண்டுவதால் அங்கு நம் கைகளில் படியும் பல கிருமிகளை கவனிக்காமல் விடுகிறோம். அந்த கையை வாய், கண்கள், மூக்கில் வைப்பதால் அவை உடலுக்குள் செல்ல நேர்கிறது. ஆய்வுகளின்படி, கழிவறையில் உள்ள கிருமிகள் நம் மொபைல் ஃபோன் திரைகளில் 28 நாட்கள் வரை உயிரோடிக்கும் என சொல்லப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

உண்மையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட 10 மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொதுவாக கழிப்பறை இருக்கையில் உள்ள கிருமிகள் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்பவை ஆகும். இவை சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை உண்டாக்கும் அபாயம் கொண்டவை. கழிப்பறை இருக்கையில் ஈ.கோலி (E.coli), என்டோரோகோகஸ் (Enterococcus), சால்மோனெல்லா(salmonella), ஷிகெல்லா (shigella), கேம்பிலோபாக்டர் (campylobacter) ஆகிய பாதிப்பு உண்டாக்கும் நோய்க்கிருமிகள் உள்ளன. நீங்கள் கழிவறைக்கு மொபைல் கொண்டு செல்லும்போது இந்த கிருமிகளையும் உடன் அழைத்து வரும் வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

34

கழிவறையில் மொபைல் பயன்படுத்துவதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மற்ற தொற்றுநோய்கள், புட் பாய்சன் ஆகியவை வர வாய்ப்புள்ளது. சிலருக்கு புண்கள் மாதிரியான தோல், சுவாச நோய்த்தொற்றுகள் வரவும் வாய்ப்புள்ளது. நாம் கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்தும்போது நேரம் போவது தெரியாமல், அங்கேயே அமர்ந்திருப்போம் இந்த பழக்கம் தவறானது. 

இதையும் படிங்க: கோடைகாலத்தில் பலாப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா! உடலின் பல நோய்களை 1பலா சுளை எவ்வாறு தீர்க்கிறது தெரியுமா?

44

கழிப்பறை இருக்கையில் ரொம்ப நேரம் உட்காருவது, மலக்குடலில் அதிக அழுத்தத்தை உண்டாக்கும். இது மூல நோய் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெகுநேரம் கழிவறையில் இருந்தால் "ஆசனவாயைச் சுற்றியுள்ள நரம்புகள் அழுத்தத்தின் கீழ் நீண்டு, வீக்கம் ஏற்படலாம்". இந்த பாதிப்புகளை தவிர்க்க கழிவறையில் மொபைல் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும். மொபைல் போனின் தொடுதிரையை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!! அதுவும் எதில் கலந்து கொடுத்தார் தெரியுமா?

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Health: தைராய்டு ஆரோக்கியத்திற்கு இந்த 8 ஊட்டச்சத்துக்கள் ரொம்ப முக்கியம்!
Recommended image2
Toilet: கழிவறையில் 10 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்தால் என்ன ஆகும்? அதிர்ச்சி தகவல்!
Recommended image3
சோடா புட்டி கண்ணாடிக்கு 'டாடா'! கண் பார்வை கூர்மையாக 5 புதுமையான வழிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved