வாடிக்கையாளருக்கு சொந்த ரத்தத்தை ஊற்றி கொடுத்த பணிப்பெண்!! அதுவும் எதில் கலந்து கொடுத்தார் தெரியுமா?
வாடிக்கையாளருக்கு காக்டெய்லில் தன் ரத்தத்தை கலந்து கொடுத்த பணிப்பெண்.. ஏன் அப்படி செய்தார் என்று கேட்டு ஜப்பான் ஹோட்டல் நிர்வாகம் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜப்பான் நாட்டில் Problem Child Dark Café என்ற அர்த்தம் கொள்ள கூடிய மொண்டாய்ஜி கான் கஃபே டகு என்ற உணவகம் இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காக்டெய்லில் தனது சொந்த இரத்தத்தை கலந்து கொடுத்துள்ளார். இதை ஹோட்டல் நிர்வாகம் தெரிந்து கொண்ட பின்னர் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த ஹோட்டலில் வேலை செய்பவர்கள் பேய்களை போல வினோதமான தோற்றத்தில் ஆடைகள் அணிந்திருப்பர். சற்றே அமானுஷ்யமாக இயங்கிவரும் இந்த ஹோட்டலில் திகிலுக்கு பஞ்சமில்லை. பழங்கள், பானங்கள் இங்கு அதிகமாக பரிமாறப்படும் என தெரிகிறது. இங்கு ஒரு வாடிக்கையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, பணிப்பெண், தனது இரத்தத்தை காக்டெய்ல் பானத்தில் ஊற்றி பரிமாறியுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்திற்கு ஹோட்டல் உரிமையாளர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விஷயத்தை தன்னுடைய ட்வீட் மூலம் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஹோட்டலில் நடந்த சம்பவம் மோசமானது என்றும் பணிப்பெண் தன் சொந்த ரத்தத்தை பரிமாறிய செயல், பகுதிநேர பயங்கரவாதத்தை போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்குள்ள கண்ணாடி கோப்பைகளை மொத்தமாக மாற்ற ஒருநாள் ஹோட்டலுக்கு விடுப்பு கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார். மேலும் இந்த மாதிரி மோசமாக காக்டெய்லில் ரத்தம் கலந்து கொடுத்த ஊழியரை பணி நீக்கம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 4 ராசிகள் தலையெழுத்தே மாறும்! பண மழையில் நனைவார்கள்!!
இது தொடர்பாக ஜப்பான் மருத்துவர்கள் தெரிவிக்கும்போது, மற்றவர்களுடைய ரத்தத்தை அருந்துவது மிகவும் ஆபத்தான செயல் என்றனர். எச்ஐவி, ஹெபடைடிஸ் சி, ஹெபடைடிஸ் பி, சிபிலிஸ் உள்ளிட்ட பாலியல் நோய்கள் இரத்தத்தின் மூலம் பரவும். ஆகையால்,
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர், அவரது இரத்தம் கலந்த காக்டெய்லை குடித்த வாடிக்கையாளர்களுக்கு இரத்தம் மூலம் பரவும் நோய்கள் ஏதேனும் பரவியுள்ளதா? என்பது குறித்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: Honey: சுத்தமான தேனை கண்டறிவது எப்படினு தெரியுமா? அடிக்கடி தேன் சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகள் இருக்கு!!