Honey: சுத்தமான தேனை கண்டறிவது எப்படினு தெரியுமா? அடிக்கடி தேன் சாப்பிட்டால் இவ்ளோ நன்மைகள் இருக்கு!!
வீட்டிலேயே அசலான தரமான தேனை எவ்வாறு அடையாளம் காண்பது? தேனின் சிறந்த நன்மைகளை என்னவென இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
தேனின் தித்திப்பான சுவை எல்லோரையும் கட்டிப்போடக் கூடியது. ருசி மட்டுமின்றி அதில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகமாக உள்ளன. ஆனால் நல்ல தேனை எல்லோராலும் உண்ண முடிகிறதா? சில தேன் பாட்டில்களில் வெறும் சர்க்கரை பாகு நிரப்பி விற்று வருகின்றனர். இங்கு அசல் தேனை கண்டுபிடிப்பது குறித்தும், அதன் நன்மைகள் பற்றியும் அறியலாம்.
தேனின் நன்மைகள்!!
தேனில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடலில் பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், எரிச்சலைக் குறைக்க தேன் உதவும். இதில் கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் அதிக ஆற்றலை பெறலாம். தேனில் இருக்கும் என்சைம்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. தேனில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றங்கள், செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தேன் காயம் குணமாவதை ஊக்குவிக்கிறது. இவ்வளவு நன்மைகளை தரும் சுத்தமான தேனை கண்டறிய சில டிப்ஸை இங்கு காணலாம்.
அசல் தேன் கண்டுபிடிப்பது எப்படி?
1) . ஒரு கிண்ணத்தில் நீர் ஊற்றி வைத்து கொள்ளுங்கள். அதில் 1 துளி தேன் ஊற்றி பாருங்கள். கரைந்தால் கலப்படமான தேன். கரையாமல் கிண்ணத்தின் அடியில் போய் படிந்தால் அது அசலான தேன்.
2). காட்டன் துணியில் தேன் நனைத்து அதை தீக்குச்சியில் காட்டுங்கள். நன்கு சுடர் விட்டு எரிந்தால் அது நல்ல தேன்.
அசல் தேன் கண்டுபிடிப்பது எப்படி?
3). சுத்தமான தேன் அடர்த்தியாகவும், பிசுபிசுப்பாகவும் இருக்கும். கொள்கலனில் இருந்து எளிதில் வெளியேறாது. தேன் தண்ணீர் போன்றோ அல்லது சளி மாதிரியோ இருந்தால் அது மற்ற பொருட்களின் கலப்படமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதால் இத்தனை நன்மைகளா!
அசல் தேன் கண்டுபிடிப்பது எப்படி?
4). சுத்தமான தேன் இயற்கையாகவே படிகம் போல கெட்டியாகிவிடும். நீண்ட நாட்களுக்குப் பிறகும் தேன் வடியும் நிலையில் திரவம் போல் இருந்தால், அது கலப்படமாக இருக்கலாம்.
5). மெழுகு அல்லது மகரந்தத் துகள்கள் மாதிரியான பொருள்கள் தேன் இருக்கிறதா என்று பார்க்கவும். தேன் தூய்மையானது. அது கலப்படமில்லை என்பதற்கான அறிகுறிகள்.
இதையும் படிங்க: இந்த டிராகன் பழம் 1 சாப்பிட்டால்.. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு, இயற்கையாகவே குறையுதே!!