கடல் மீன், ஆற்று மீன் மற்றும் ஏரி மீன்கள் போன்றவை பல்வேறு சூழலில் இருக்கும் நீர்நிலைகளில் வளர்ந்தாலும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் இதில் இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

கடல்வாழ் உயிரினமான மீனில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. மீனில் புரதச் சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ளது. ஆகவே, அனைருக்கும் ஏற்ற ஓர் சிறந்த உணவாக மீன் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கடல் மீன், ஆற்று மீன் மற்றும் ஏரி மீன்கள் போன்றவை பல்வேறு சூழலில் இருக்கும் நீர்நிலைகளில் வளர்ந்தாலும், அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் இதில் இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

ஆற்று மீன்

ஆற்று மீன் மற்றும் ஏரி மீன்கள் அனைத்தும் ஆறு, குளம் மற்றும் ஏரிகளில் இருக்கும் புழு, பூச்சிகளை உணவாக்கி வளர்கிறது. ஆற்று மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இல்லை. குறிப்பாக கடலில் வாழும் மீன்களில், பெரிய மீன்களை விடவும் சிறிய மீன்களில் தான், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது.

உதாரணமாக காணங்கெளுத்திமத்தி, மத்தி மற்றும் சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளது. இது உடலில் உள்ள இரத்தத்தை உறையாமல் பார்த்துக் கொள்கிறது. 

இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும், மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.

மீன் மாத்திரைகள் மற்றும் மீன் எண்ணெய் போன்றவை இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

Ginger-Garlic Paste: இஞ்சி-பூண்டு விழுதை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

கடல் மீன் 

கடலில் வளரும் கடற்பாசிகளை உட்கொண்டு கடல் மீன்கள் வளர்கிறது. இதனால், இந்த மீன்களில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. 

கடற்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் மற்றும் புரதச் சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. ஆகவே, இதனை சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகளவில் நிறைந்துள்ளது.

உப்பு நீரில் வளரும் காரணத்தால், கடல் மீன்களின் உடலில் சோடியத்தின் அளவானது அதிகளவில் இருக்கும். அதே போல் கால்சியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். கடல் மீன்கள் சிப்பி, இறால் மற்றும் கடற்பாசிகளை உண்டு வாழ்வதால், இதயம் மற்றும் மூளைக்கு நன்மை தரும் ஒமேகா-3 அதிகமாக நிறைந்துள்ளது.

Pirandai: நூற்றுக்கணக்கான நோய்களை குணப்படுத்தும் அதிசய மூலிகை: உடனே சாப்பிடுங்கள்!

முடிவு

கடல் மீனிலும் சரி, ஆற்று மீனிலும் சரி உடலுக்குத் தேவையான அடிப்படை சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. ஆற்று மீன்களோடு ஒப்பிடுகையில், கடல் மீன்களில் சிறிதளவு உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மை. இருப்பினும் அவை நம் உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிப்பதில்லை.