Ginger-Garlic Paste: இஞ்சி-பூண்டு விழுதை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் சேர்க்கும் போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்வோம்.
உணவில் சுவையை சேர்ப்பதற்கு பயன்படும் ஒரு அற்புதமான பொருள் தான் இஞ்சி-பூண்டு விழுது. பெரும்பாலான குடும்பங்களில் பல உணவுகளில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக வீடுகளில் இயற்கையாக அரைக்கப்படும் இஞ்சி-பூண்டு விழுது பல வகையான உணவுகளின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. அவ்வகையில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய இரண்டையும் சேர்க்கும் போது நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்வோம்.
இஞ்சி- பூண்டு விழுதின் நன்மைகள்
இஞ்சி-பூண்டு விழுதை உணவில் சேர்த்தால் வயிற்றுப்போக்கை குறைக்கும்; நச்சுகளை வெளியேற்றி விடும்; மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை போக்கும்; உடல் சரியாக செயல்பட உதவி புரிகிறது.
Pirandai: நூற்றுக்கணக்கான நோய்களை குணப்படுத்தும் அதிசய மூலிகை: உடனே சாப்பிடுங்கள்!
- சிறுநீர்ப்பை மற்றும் கல்லீரலின் செயல்பாட்டில் நச்சுகளை அகற்ற இஞ்சி-பூண்டு விழுது உதவுகிறது.
- அடிக்கடி உணவில் இஞ்சி-பூண்டு விழுதை சேர்ப்பதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மேலும் நிலையான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது, உங்கள் உடலை சூடாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், தாய்ப்பாலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் இஞ்சி-பூண்டு விழுது உதவுகிறது.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
- இஞ்சி-பூண்டு விழுதை உணவில் சேர்ப்பதால், இது புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது என சில ஆய்வு முடிவுகள் கூறுகிறது.