Rye Rice: நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் கம்பு சாதம்! செய்வது எப்படி?
நாம் அடிக்கடி உண்ணும் தானியங்களில் மிக முக்கியமானது கம்பு. கம்பைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகளை, பெரியவர்கள் வீட்டில் செய்வதுண்டு.
உணவில் அடிக்கடி தானியங்களை எடுத்துக் கொண்டால், பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். தானியங்களை காலை அல்லது மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். நாம் அடிக்கடி உண்ணும் தானியங்களில் மிக முக்கியமானது கம்பு. கம்பைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகளை, பெரியவர்கள் வீட்டில் செய்வதுண்டு.
நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் கம்பு
நீரிழிவு நோயாளிகளுக்கு, கம்பு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கம்பில் லோகிளைசெமிக் தன்மை உள்ளது. இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி உணவில் எடுத்துக் கொள்ளலாம். கம்பில் நார்ச்சத்தும் அதிகளவில் நிறைந்துள்ளது. அதேநேரத்தில், கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தினந்தோறும் காலையில் கம்புவைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையைத் தரும் கம்பு சாதம் செய்வது எப்படி என்று இப்போது காண்போம்.
கம்பு சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்
மூளையை ஆக்ட்டிவாக வைக்க உதவும் மூலிகை டீ !
செய்முறை
கம்பு சாதத்தை ருசியாக செய்வதற்கு, கம்பை நன்றாக அலசி, கழுவி ஒரு கப் அளவு தண்ணீரில் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், நன்றாக தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்க வேண்டும். அதாவது பார்க்கும் போது உடைத்த ரவை போல இருக்கும் அளவுக்கு சுற்றி எடுக்க வேண்டும்.
உடைத்த கம்பை எடுத்து, மீதமுள்ள 1 1/2 கப் தண்ணீருடன், தேவையான அளவு உப்பைச் சேர்த்து குக்கரில் வைத்து, 5 விசில்கள் வரும் வரை விட்டு எடுக்க வேண்டும். சமையல் செய்யும்போது அரிசி வேகவைப்பதை விடவும், சற்று அதிக நேரம் வேக வைக்க வேண்டும்.
பின்னர், குக்கரின் சூடு ஆறியதும், கம்பு சாதத்தை வெளியில் எடுக்க வேண்டும். இப்போது மிகவும் சுவையான கம்பு சாதம் தயாராகி விடும்.