மூளையை ஆக்ட்டிவாக வைக்க உதவும் மூலிகை டீ !

வாங்க! மூளையை ஆக்ட்டிவாக வைக்க உதவும் மூலிகை டீயை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to  make Herbal Tea in Tamil

நம்மில் அனைவரும் காலை எழுந்தவுடன் முதலில் செய்வது, டீ அல்லது காபி அருந்துவது தான்.அதனை பருகினால் தான் அடுத்த வேலைக்கே செல்வோம். 

ஒரு முறை டீ குடிக்காவிட்டால், எதையோ இழந்தது போல் சிலர் உணர்வார்கள். டீக்களில் மசாலா டீ , இஞ்சி டீ, க்ரீன் டீ , லெமன் டீ , புதினா டீ என்று இன்னும் பல வகை இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மூலிகை டீ எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். 

மூலிகை டீயை குடித்தால், அன்றைய நாள் முழுதும், உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம். அதிலும் குறிப்பாக இந்த மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் பலருக்கும் ஏற்படும்.அதற்கு இந்த மூலிகை டீயை செய்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

வாங்க! மூளையை ஆக்ட்டிவாக வைக்க உதவும் மூலிகை டீயை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பால் – 3 க்ளாஸ் 
தண்ணீர் – 1 க்ளாஸ் 
டீ தூள் – 2 ஸ்பூன் 
ஏலக்காய் – 3
லவங்கம் – 1 
பட்டை – 1
இஞ்சி – 1 இன்ச்
சுக்கு – 1 இன்ச் 
புதினா இலை -5
துளசி இலை – 10
கற்பூரவல்லி இலை – 2
மிளகு – 10
தனியா – 1/4 ஸ்பூன் 
வெல்லம் – 1/4 கப்

க்ரிஸ்பி & ஹெல்த்தியான பாகற்காய் சிப்ஸ் செய்வோமா?

செய்முறை:

முதலில் டீ பானில் 3 க்ளாஸ் பால் ஊற்றி (தண்ணீர் சேர்க்காமல் ) அதனை 2 க்ளாஸ் பாலாக காய்த்துக் கொண்டு, அதனை தனியாக எடுத்துக் கொண்டு, ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி, ஏலக்காய்,பட்டை,லவங்கம், இஞ்சி, சுக்கு, துளசி, மிளகு, புதினா, 
கற்பூரவல்லி, தனியா ஆகிவற்றை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.கொதித்து இப்போது தண்ணீரின் நிறம் மாறி இருக்கும் போது, டீ தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். 

பின் இப்போது ஆற வைத்துள்ள பாலினை சேர்த்து ,பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து மிக்ஸ் செய்து கொண்டு, மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விட்டு, ஒரு க்ளாசில் வடிகட்டினால் மூலிகை டீ ரெடி!!!! இந்த மூலிகை டீயின் மணமும் . சுவையும் அலாதியாக இருக்கும் இதனை இன்றே செய்து பாருங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios