வாயு தொல்லை, அஜீரணம் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று உபாதைகளால் பாதிக்கப்படுவது சாதாரணமாகவே அனைவருக்கும் நடப்பது தான். இவற்றை தடுப்பதற்கு எளிமையான வழி வீட்டிலேயே உள்ளது. வெறும் தயிர் மட்டும் இருந்தால் போது, அதோடு சில எளிமையான பொருட்களை சேர்த்து சாப்பிட்டு உடனடியாக வயிற்று பிரச்சனை காணாமல் போய் விடும். 

வாயு தொல்லை, வயிற்றுப் போக்கு, அசிடிட்டி, அஜீரணம் என பலவிதமான வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். இந்த பிரச்சனைகள் எந்த விதமான பக்க விளைவும் இல்லாமல் உடனடியாக சரியாவதற்கு தயிருடன் சில குறிப்பிட்ட பொருட்களை கலந்து சாப்பிட்டால் உடனடியாக வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகி விடும். வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தயிர் மிகச் சிறந்த நிவாரணியாகும். அதிலும் வீட்டு சமையல் அறையில் இருக்கக் கூடிய எளிய பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தும் போது உடனடி நிவாரணம் கிடைக்கும். 

தயிரில் புரோட்டீன், கால்சியம்,நல்ல பாக்டீரியாக்களை கொண்ட புரோபயாடிக்கள் ஆகியவை அதிகம் உள்ளன. இவை ஜீரண மண்டலம் நன்கு செயல்படவும், வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும். தயிருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து உடனடியாக வயிற்று பிரச்சனைகள் சரியாகும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

இஞ்சி :

பல உணவுகளில் சேர்க்கப்படும் இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்ரி, ஆன்டிமைக்ரோபியல் தன்மைகள் அதிகம்.இத உடனடியாக ஜீரண குழாயில் சென்று செயல்பட துவங்கி, உடனடியாக நிவாரணம் தரும். சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, துருவி எடுத்துக் கொண்டு, அதை தயிருடன் கலந்து சாப்பிடுவதால் விரைவில் உணவு செரிப்பதற்கு உதவிடும். இதில் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.

மஞ்சள் :

அனைவரின் வீட்டு சமையல் அறையிலும் கண்டிப்பாக இருக்கும் பொருள் மஞ்சள். இது வயிறு பிரச்சனைகளுக்கு ஏற்ற அற்புத மருந்தாலும். இதில் ஆன்டிசெப்டிக், ஆன்டி இன்ஃபிலமேட்டிரி காரணிகள் உள்ளன. இது குடல் அலட்சி ஏற்படுவதை தடுக்கும். தயிருடன், சிறிது மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுவதால் வயிற்றில் ஏற்படும் கிருமி தொற்றுகள் நீங்கும். சூடான சாதத்தில் இதை கலந்து சாப்பிடுவதும் நல்லது.

சீரகம் :

அஜீரணம், வாயு தொல்லை என்றாலே அவற்றிற்கு சிறந்த மருந்து சீரகம் தான். இதில் உணவு செரிமானத்திற்கான என்சைம்களை தூண்டி, விரைவில் உணவு செரிக்க உதவி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் காரணிகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை தாக்கி அளிக்கிறது. சிறிதளவு சீரகத்தை லேசாக பொறித்து, சிறிது உப்பு சேர்த்து தயிருடன் சாப்பிடலாம். சிறிது தேன் கலந்து சாப்பிடுவதும் அதிகமான நன்மைகளை தரும். 

புதினா:

புதினா, அஜீரண பிரச்சனைகளுக்கும், கிருசி தொற்றை நீக்கவும் ஏற்றது. இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மை அதிகம் என்பதால் நுண்ணுயிர்களை எதிர்த்து போராடக் கூடியது. சிறிது புதினா இலைகளை கசக்கி, தயிருடன் நன்கு கலந்து, சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்தும், சிறிது எலுமிச்சை பிளிந்தம் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகள் சரியாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

சோம்பு :

ஜீரண சக்தியை அதிகரிக்க செய்து, வயிற்றில் ஏற்படும் மந்தத் தன்மை, வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகளும் சரியான தீர்வு தரும் ஒரு மிகச் சிறந்த பொரும் சோம்பு. இதை சாதாரணமாக அப்படியேவும் கூட சாப்பிடலாம். அதை விட சோம்பை லேசாக வறுத்து, பொடித்து, அந்த பொடியை தயிருடன் கலந்து சாப்பிடலாம். இந்த கலவையை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடுவதால் சிறிது நேரத்திலேயே நன்கு நிவாரணம் கிடைக்கும்.