கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.. தென் மாநிலங்களில் அதிகரிக்கும் பாதிப்பு.. அப்ப தமிழ்நாடு..? அதிர்ச்சி தகவல்..
2023-ம் ஆண்டில் இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.42 லட்சம்.
கடந்த 2-ம் தேதி 32 வயதான பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது.. அவரின் மறைவுக்கு பல்வேறு இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், அடுத்த நாள், தான் உயிரோடு இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பூனம் பாண்டே வெளியிட்டார்.
கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார். ஆனால் அவரின் இந்த செயல் சர்ச்சையானதை தொடர்ந்து அவரை பலரும் விமர்சித்து வந்தனர்.ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருக்கிறாதா என்றால் இல்லை என்பதே பதில்.
தென் மாநிலங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு
2023-ம் ஆண்டில் இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.42 லட்சம். தென் மாநிலங்களில் தான் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன என்பதே அதிர்ச்சியான தகவல். இந்தியாவில், மார்பகம் புற்றுநோய்க்குப் பிறகு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகமானோரை பாதித்துள்ளது. ண்டுள்ளது.
தேசிய புற்றுநோய் பதிவு திட்ட அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 45,682 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு பதிவாகி உள்ளது. இந்த பட்டியலில் 36,014 கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 20,678 பாதிப்புகளும், ஆந்திராவில் 17,146 பாதிப்புகளும், தெலங்கானாவில் 11,525 பாதிப்புகளும், கேரளாவில் பாதிப்புகளும் 2023 இல் பதிவாகியுள்ளன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயின் உயிரணுக்களில் உருவாகும் ஒரு வகை புற்றுநோயாகும், இது பொதுவாக மனித பாப்பிலோமா வைரஸின் (HPV) காரணமாக ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற பாலியல் பழக்கவழக்கங்கள் மற்றும் பலருடன் உடலுறவு ஆகியவை காரணமாக இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் குறைந்த சமூகப் பொருளாதார நிலைகளில் இந்த புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகிறது" என்று சென்னையைச் சேர்ந்த காவேரி மருத்துவமனையின் இயக்குநரும் மூத்த ஆலோசகருமான கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் ஏஎன் வைத்தீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் "பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகள் மற்றும் அடிக்கடி பிரசவம், சட்டவிரோத கருக்கலைப்பு ஆகியவை காரணமாக கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் , மார்பக புற்றுநோய் அதிகமாக இருக்கும் பெருநகர நகரங்களை விட கிராமப்புறங்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது " என்று கூறினார்.
ஹைதராபாத் யசோதா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாரதா இதுகுறித்து பேசிய போது “உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய்க்கு இடையில் ஏற்படும் அசாதாரண இரத்தப்போக்கு; உடலுறவின் போது வலி; சிறுநீர் கழிக்கும் போது வலி; இடுப்பு வலி,து மலக்குடலில் இருந்து இரத்தப்போக்கு; மற்றும் கால்களின் வீக்கம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் சில பொதுவான அறிகுறிகளாகும்" என்று தெரிவித்தார்.
பேப் ஸ்மியர்ஸ் மற்றும் HPV சோதனைகள் போன்ற கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகளுக்கு, உடல் உறுப்புகளை சுகாதார நிபுணர்களுக்கு வெளிப்படுத்தும் பெண்ணோயியல் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இது பல பெண்களுக்கு தடையாக இருக்கலாம், குறிப்பாக கிராமப்புற இந்தியாவில், பெண் உடல் தொடர்பான கலாச்சார விதிமுறைகள் மற்றும் அடக்கம் ஆழமாக வேரூன்றியுள்ளது.
பெங்களூரில் உள்ள சங்கரா மருத்துவமனையைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர், மகப்பேறு மருத்துவர் அன்னபூர்ணா வி, இதுகுறித்து பேசிய போது “பல முறை நாங்கள் ஸ்கிரீனிங் முகாம்களை ஏற்பாடு செய்திருந்தாலும், பெண்கள் வருவதில்லை. நோயறிதலுக்கும் அவர்கள் பயப்படுகிறார்கள்.தங்கள் உடல்நிலை சீராக இருப்பதாக நம்புகிறார்கள். HPVக்கான ஸ்கிரீனிங் மற்றும் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த பயம் நோயறிதலைப் பற்றியது மட்டுமல்ல, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் தொடர்புடைய HPV போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய ஒழுக்கக்கேடு பற்றிய கருத்து போன்ற சமூக தாக்கங்களையும் பற்றியது. எனினும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் கட்டுப்படுத்தலாம். நோயறிதலைச் சுலபமாகச் செய்துவிடலாம்” என்று தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் கர்நாடகா உட்பட - நாட்டின் மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், பெண்களிடையே பல சமூகத் தடைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
பல பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினர் கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை செய்யும் முடிவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் குறிப்பிட்டனர். இதன் விளைவாக பெண்கள் சோதனைகளை தவிர்த்து, அறிகுறிகள் தீவிரமடையும் வரை விட்டுவிடுகின்றனர். மேலும் பல பெண்கள் இதுகுறித்து பேசவே தயங்குகின்றனர்.
பொது மருத்துவமனைகளில் அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால் சோதனை செய்யவில்லை என்று தெரிவித்தனர்,, தனியார் மருத்துவமனைகளில் சோதனை வசதி இருந்தாலும், அதற்கு தங்களுக்கு போதிய நேரமில்லை என்றூ சில பெண்கள் தெரிவித்தனர்.
எனினும் பெரும்பாலான பெண்கள் தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உணர்கின்றனர், அதன் விளைவாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சோதனையின் அவசியத்தை உணரவில்லை. தேனி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான முன்னோடித் திட்டத்தைத் தொடங்கிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் இதே பிரச்சினைகளை எதிர்கொண்டன.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் HPV தடுப்பூசியை மத்திய அரசு "ஊக்குவிக்கும்" என்று அறிவித்தார். இந்தியாவில் HPV தடுப்பூசியின் விலை தடுப்பூசியின் வகை மற்றும் வழங்குநரைப் பொறுத்து மாறுபடும்.
பெரும்பாலான HPV தொடர்பான புற்றுநோய்களுக்கு காரணமான ஒன்பது வகையான HPV க்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் கார்டசில்-9 என்ற தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.11,000 ஆகும். இந்தியத் தயாரிப்பான Cervavac தடுப்பூசி இரண்டு டோஸ் ரூ4,000க்கு கிடைக்கிறது.
அஸ்ஸாம் போன்ற இந்தியாவின் சில மாநிலங்கள், குறிப்பிட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவிகளுக்கு இலவச HPV தடுப்பூசி திட்டங்களை அறிவித்துள்ளன, மேலும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGEI) 9-14 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு வழக்கமான தடுப்பூசியை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது.
பெண்களுக்கு தடுப்பூசி அவசியம். இந்தியாவில் போலியோ தடுப்பூசி நிறுத்தப்பட்டது போல, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவும். தடுப்பூசிக்குப் பிறகு பெண்களுக்கு 97 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- cancer
- cervical
- cervical cancer
- cervical cancer causes
- cervical cancer diagnosis
- cervical cancer hpv
- cervical cancer pain
- cervical cancer pap smear
- cervical cancer prevention
- cervical cancer risk factors
- cervical cancer signs and symptoms
- cervical cancer stages
- cervical cancer staging
- cervical cancer survivor
- cervical cancer symptoms
- cervical cancer treatment
- cervical cancer vaccine
- hpv and cervical cancer
- symptoms of cervical cancer