Asianet News TamilAsianet News Tamil

Health tips: குளிர்காலத்தில் நிறைய பட்டாணி சாப்பிடுங்கள்- அடுத்து நடக்கும் அற்புதம்..!!

குளிர்காலங்களில் பச்சை காய்கறிகளைச் சாப்பிடச் சொல்லி பலரும் வலியுறுத்துவார்கள். அதற்காக கீரைகள், வெங்காயம், பச்சைப் பூண்டு உள்ளிட்டவை மருத்துவ வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் பட்டாணி பயறும் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய முக்கிய பொருளாகும்.
 

Peas remove many health problems of winter
Author
First Published Dec 19, 2022, 4:27 PM IST

குளிர்காலத்தில் காணப்படும் புதிய பச்சை பட்டாணி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையை வழங்குகிறது. இது இருதய நலன் மற்றும் சிறுநீரகத்துக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பச்சைப் பட்டானியை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பசி ஏற்படுவது குறைந்து, உடல் எடை குறையத் தொடங்குவர். இதனுடைய நற்குணங்கள் அறிந்துதான், பச்சை பட்டாணி மேகி முதல் வெஜ் பிரியாணி வரை பயன்படுத்தப்படுகிறது.

ஆண்டி ஆக்சிடண்டுகள்

பச்சைப் பட்டாணியில் இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரம் போன்ற குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும், பட்டாணியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. பட்டாணியில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்த் உள்ளிட்ட பொருட்கள் கண் பார்வையை மேம்படுத்துகிறது.

குதிகால் மற்றும் உதடுகளை காக்கும்

பட்டாணியில் வைட்டமின்-ஏ மற்றும் இ நிறைந்துள்ளது. இந்த இரண்டு வைட்டமின்களும் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. குளிர் காலநிலையில் உதடுகள் மற்றும் குதிகாலில் விரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்று தான். பச்சை பட்டாணி சாப்பிடுவதால் அந்த பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 

நார்ச்சத்து நிறைந்தது

பச்சை பட்டாணியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு நல்லது. இதில் புரதமும் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது மற்றும் பட்டாணியை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.

அற்புத பலன்களை தரும் மாதுளை பழத்தின் தோல்..!!

சருமம் பொலிவு பெறும்

பச்சை பட்டாணி சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, அழகுக்கும் கூட பல பயன்களை வழங்குகின்றன. பச்சை பட்டாணியை அரைத்து முகத்தில் தடவுவது இயற்கையான ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. பச்சை பட்டாணி சருமத்தை சுத்தப்படுத்தி முகத்திற்கு பொலிவைத் தரும். பச்சை பட்டாணியில் பாலிமியோதல்லானமைடு என்கிற பொருள் உள்ளது. இது அல்சைமர் நோயை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது

மூட்டு வலி வராது

பட்டாணியில் காணப்படும் செலினியம் கீல்வாதம், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. வாயு பிரச்சனை இருந்தால் பட்டாணியை கவனமாக சாப்பிடுங்கள். இதில் பல நன்மைகள் இருந்தாலும், அதிகம் சாப்பிட்டால் வாயுவை உண்டாக்கும். எனவே, உங்களுக்கு வாயு பிரச்சனை இருந்தால், சிறிது எச்சரிக்கையுடன் பட்டாணியை சாப்பிடுவது முக்கியம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios