அற்புத பலன்களை தரும் மாதுளை பழத்தின் தோல்..!!
மாதுளையைப் போலவே, அதன் தோலும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவற்றை உலர்த்தி, அரைத்து, முக்கியமாக தேநீர் போட்டு குடித்து வருவதன் மூலம், உடலுக்கு பல்வேறு அற்புத நன்மைகள் கிடைக்கின்றன.
முன்பெல்லாம் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு, அதனுடைய தோல் உள்ளிட்ட விதைகளை தூக்கி வீசிவிடுவார்கள். ஆனால் இன்று அழகு பராமரிப்புக்கு பலரும் முக்கியத்துவம் தருகின்றன. அதுவும் இயற்கையான பொருட்களில் இருந்து கிடைக்கும் சரும ஆரோக்கிய பயன்பாடுகளை பெரிதும் விரும்புகின்றனர். அதன்மூலம் பழங்களின் தோல் மற்றும் விதைகளில் காணப்படும் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வு பலரிடையே எழுந்துள்ளது. அந்த வகையில் பலராலும் தூக்கி எறியப்படும் மாதுளை பழத்தின் தோலில் இருந்து சருமத்துக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மாதுளம்பழத்தின் தோலை பதப்படுத்தி தேநீராக பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் அதிகளவில் இருப்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. தொண்டை புண், இருமல் மற்றும் சளி போன்ற பருவகால நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் மாதுளம் தோல் தேநீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாதுளையில் வைட்டமின்-சி அதிகம் உள்ளது. எனவே, அதன் தோலைப் பயன்படுத்தும் போது அந்த சத்து பூரணமாக கிடைக்கிறது. மாதுளை தோல் கசப்பாக இருந்தாலும், அதன் மூலம் உடலில் சேரும் நச்சுக்கள் எளிதாக வெளியேற்றப்படும். அதேபோன்று செல் சேதத்தை சரிசெய்யவும் உதவுகிறது
வயிறு ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். மாதுளை தோல் வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் குடல்களை பாதிக்கும் பல பிரச்சனைகளுக்கு எதிராக போராட உதவுகிறது. மாதுளம்பழத்தின் தோலில் உள்ள 'டானின்' இதற்கு உதவுகிறது. மாதுளையில் உள்ள வைட்டமின்-சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நமது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அவை அனைத்தும் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், pH சமநிலையை பராமரிக்கவும் உதவுகின்றன.
வெள்ளை சக்கரையை விட்டுவிடுங்கள்- உடனடியாக இந்த இனிப்புகளுக்கு மாறுங்கள்..!!
மாதுளம்பழத்தை உரித்த பின் அதன் தோலை நீக்கி நன்கு காய வைக்கவும் அல்லது மைக்ரோவேவில் சுட்டு எடுக்கலாம். அதையடுத்து உலர்ந்த தோலை நன்றாக அரைக்கலாம். இந்த பொடியை தேநீர் பையில் சேமித்து வைக்கலாம். அதையடுத்து விரும்பும் போது தேநீர் போட்டு குடிக்கலாம். நீங்கள் பல்வேறு வகையான தேயிலைகளில் ஆர்வமாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக இதை முயற்சி செய்யலாம். இல்லையெனில், அதன் ஆரோக்கிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு மட்டுமே அதை உட்கொள்ள முடியும்.