இன்னும் சில நாட்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ள சூழலில், குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தால் அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமானதாகவும் கடுமையாக இருப்பதாகவும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) அதிகபட்சமாக 249-யை தொட்டுவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு (AQI) என்பது, தற்போது காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது அல்லது எதிர்காலத்தில் எவ்வளவு மாசுபடக்கூடும் என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு அரசாங்கக் கருவியாகும். இத்தகைய ஆபத்தான தரவுகளுக்கு மத்தியில், சுவாச நோய்கள் உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தீபாவளி கொண்டாடப்படவுள்ள சூழலில், குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தால் அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா என்பது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரையும் பாதிக்கும் ஒரு சுவாசப் பாதிப்பாகும். இதை ஒரு அழற்சி நோய் என்றும் குறிப்பிடலாம். இதனால் நுரையீரலுக்குச் செல்லும் காற்றுப்பாதைகள் சுருங்கி வீங்கி கூடுதல் சளியை உருவாக்கி, சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி விடுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஆஸ்துமாவை கவனமாக கையாள வேண்டும். அவர்களுக்கு சளி அல்லது பிற சுவாச தொற்று போன்ற சில தூண்டுதல்களுக்கு வெளிப்படும் போது நுரையீரல் மற்றும் காற்றுப்பாதைகள் எளிதில் வீக்கமடைந்துவிடும். 

காற்று மாசு எப்படி குழந்தைகளை பாதிக்கிறது?

இந்தியாவில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் காற்றில் உள்ள ஓசோன் அளவுகள் கணிசமாக உயரும். இதனால் தீங்கு ஏற்படுத்தும் வாயுக்கள் நம்முடைய மண்டலத்துக்குள் புகுந்து புகை அல்லது பனிமூட்டத்தை ஏற்படுத்தும். இதனால் நுரையீரலின் காற்றுப்பாதைகள் பிரச்னையை சந்திக்கும். அதனால் நுரையீரல் செயல்பாடுகள் குறைந்து, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சுவாசிக்க கடினமாகிவிடுகிறது. காற்றில் உள்ள துகள்கள் உங்கள் மூக்கு அல்லது வாய் வழியாகச் சென்று உங்கள் நுரையீரலுக்குள் செல்லலாம். ஆஸ்துமா உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அந்த துகள்கை சுவாசிப்பதால் மேலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த 5 உறுப்புகள் சரியாக இயங்கினால் தான் தாம்பத்யம் சிறக்கும்..!!

குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

உங்கள் பிள்ளைக்கு ஆஸ்துமா இருந்தால், உங்கள் குழந்தையை வெளிப்புற காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளன. முதலாவதாக, உங்கள் குழந்தையை வெளியே செல்ல விடாதீர்கள். அவர்களை முடிந்தவரையில் வீட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை அவர்கள் பட்டாசு வெடிக்க வெளியில் செல்ல வேண்டும் என்றால், முகக்கவசம் அணிந்து வெளியே அனுப்புங்கள். உங்கள் குழந்தைகள் இன்ஹேலர்களை பயன்படுத்தக்கூடியவர்கள் என்றால், அதை எப்போதும் கையில் வைத்திருப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் உங்கள் பகுதியில் காற்றின் தரக் குறியீட்டை சரிபார்த்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளை திட்டமிடுங்கள். 

உங்கள் வீடுகளில் ஆரோக்கியமாக தீபாவளியை கொண்டாட இதைச் செய்யுங்கள்...!! போதும்..!!

உள்புறங்களிலும் பாதுகாப்பு மிகவும் அவசியம்

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் மட்டுமல்ல, வீட்டிற்குள்ளும் சுவாசக் கோளாறுகளை அனுபவிக்கும் அபாயத்தில் உள்ளனர். ஏதேனும் உட்புறங்களில் அவர்கள் இருக்கும் போதும், அதை சுற்றியுள்ள காற்றில் சிறிய துகள்கள் அல்லது கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் இடம்பெறுகின்றன. இவை வீட்டுக் கிளீனர்கள் மற்றும் ஏர் ஃப்ரெஷ்னர்கள், விறகு எரியும் அடுப்புகள், நச்சுப் புகைகள், பெயிண்ட் பொருட்கள், சமையல் மெழுகுவர்த்திகள், நெருப்பிடம் அல்லது புகையிலை, பூச்சிக்கொல்லிகள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் இருந்து ஏற்படலாம்.

உட்புற காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிகள்

 வீட்டிற்குள் புகைபிடிக்காதீர்கள், வீட்டில் அச்சுகள் வளர்வதைத் தவிர்க்கவும், நச்சுக்காற்றை வெளியேற்றும் கருவிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன, அதை வீட்டில் வாங்கி வைக்கவும். நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள், ஆனால் வெளியில் காற்றின் தரம் மோசமாக இருந்தால், அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டு காற்று சுத்திகரிப்பு கருவியை பயன்படுத்தவும். வாசனை மெழுகுவர்த்திகள் அல்லது வாசனை மறைக்கும் வாசனை திரவியங்கள் பயன்படுத்த வேண்டாம். அதேபோல உங்கள் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வீட்டில் வைத்திருப்பதையும் தவிர்த்திடுங்க. பெயிண்ட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வீட்டில் சேமித்து வைக்க வேண்டாம்.