இந்த தீபாவளியை எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல், நன்றாக இனிப்பு சாப்பிட்டு ஆனந்தமாக கொண்டாடலாம். அதற்காக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ளோம். அதற்காக பல குடும்பத்தினர் அதிவேகமாக தயாராகி வருகின்றனர். புத்தாடைகள் வாங்கவும், பட்டாசுகளை தேடிப் பிடித்து வாங்கவும் பல்வேறு நகரங்களில் மக்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையில் தீபாவளிக்காக பார்ட்டி செய்யும் பணிகளிலும் ஒருசிலர் ஈடுபட்டு இருக்கலாம். தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளுக்கு அடுத்து இனிப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. எனினும் பத்தியம் கடைப்பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தக் கொதிப்பு கொண்டவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் பெரியளவில் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். அதற்கு காரணம் அதிகளவு இனிப்பு சாப்பிட்டுவிட்டால், அடுத்தடுத்த நாட்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்கிற குற்ற உணர்வு தான். இதனாலேயே பலரும் இனிப்புகளை சாப்பிடலாமல் தவிரித்து வருவர். ஆனால் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை எந்தவிதமான குற்ற உணர்வுமில்லாமல் ஆனந்தமாக கொண்டாட பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் வழிமுறைகளை கூறியுள்ளனர். அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
பால் பொருட்கள் கொண்ட இனிப்பு வகைகள்
முடிந்தவரையில் பால் பொருட்களை மையமாக வைத்து செய்யப்பட்ட இனிப்புகளை சாப்பிடலாம். அதன்படி ஷிர்கந்து, சாந்தேஷ், மிஸ்ஹித் தோய், கீர் (பாயசம்) போன்றவற்றில் சர்க்கரை அளவு கம்மியாக இருக்கும். பாலிலுள்ள சுவையை மட்டுமே மையமாக வைத்து இந்த இனிப்புகள் செய்யப்பட்டு இருக்கும். மேலும் இந்த இனிப்பு வகைகளில் முதல் தர புரதச்சத்து உள்ளது, மேலும் இவற்றை வீடுகளி எளிதாக செய்துவிடலாம்.
அடிக்கடி வெளுத்துப் போகும் துணிகளை; மீண்டும் புதியது போல மாற்றுவது எப்படி?
சக்கரைக்கு பதிலாக இதை பயன்படுத்துங்கள்
இனிப்புகளில் சேர்க்கப்படும் சக்கரைக்கு பதிலாக, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை மாற்றாக பயன்படுத்தலாம். அதன்படி பட்டை, இலவங்கம், உலர் பழங்கள், பேரீச்சை, உலர் திரட்சை மற்றும் பழங்கள் போன்றவை இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் கிடைக்கூடிய பொருட்களாகும். மேலும் இந்த பொருட்களை வைத்து இனிப்புகள் செய்யப்படும் போது, இனிப்புச் சுவை குறைவாகவே இருக்கும். மேலும் இதனால் நீரிழிவுப் நோய் பாதிப்பு அதிகமாவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளன. ஒருவேளை மேலும் இனிப்புச் சுவையை கூட்ட வேண்டுமானால் மண்ட வெல்லம், கருப்புச் சாறு போன்றவற்றை கூடுதலாக சேர்த்து இனிப்புகளை செய்யலாம்.
ஆரோக்கியம் மிகுந்த இனிப்புகளை சாப்பிடுங்கள்
பலருக்கும் முந்திரிக் கொண்டு செய்யப்படும் காஜு கட்லி மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கு பதிலாக பாதாம் கொண்டு செய்யப்படும் பாதாம் கட்லியை சாப்பிடலாம். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ரவா லடூவை விட மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களைக் கொண்ட வேர்க்கடலை லட்டு மற்றும் கடலை மாவு லட்டுவை சாப்பிடலாம். மைசூர்பாக்குக்கு பதிலாக தேங்காய் லட்டு சாப்பிடலாம். கேரட் அல்வாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அரிசி கொண்டு செய்யப்படும் பாயாசத்தை விடவும் பருப்பு மற்றும் மண்ட வெல்லம் கொண்டு செய்யப்படும் பாயாசத்தை சாப்பிடலாம்.
Cholesterol Control : கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான உணவுப் பழக்கங்கள்..!!
புதிய பொருட்கள் கொண்டு புதிய இனிப்புகள்
புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான பொருட்களை வைத்தும் இனிப்புச் சமைக்கலாம். பேரிச்சம்பழம் எள் லட்டு, ஓட்ஸ் டேட்ஸ் நட் லட்டு, வால்நட் லட்டு, வெந்தய கீரை பாயாசம், ஆப்பிள் ஷீரா, பழ கீர், பப்பாளி அல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் கலகண்ட், ஓட்ஸ் அப்பம், குருதிநெல்லி சிரப் அல்லது நாவல் பழ சிரப், சாக்லேட் புரோட்டீன் சிரப், ஆப்பிள்-பூசணிக்காய்-பழ தயிர்-விதைகள் கொண்டு செய்யப்படும் பை அல்லது கீஷ் போன்றவை சத்து மிகுந்தது மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்ததாத இனிப்பு வகைகள் ஆகும்.
எதுவாக இருந்தாலும் அளவு தான்
ஜலேபி, மல்புவா, குலாப் ஜாமூன், குல்பாப்டி, ஷீரா போன்ற கொழுப்புகள் அதிகம் உள்ள இனிப்பு வகைகள் உங்களுடைய இனிப்புச் சுவையை தூண்டலாம். எதுவாக இருந்தாலும் ஒரு சிறு வாய் அல்லது ஒரு ஸ்பூன் மட்டும் தான். அதற்காக அனைத்து இனிப்புகளும் ஒரு ஒரு ஸ்பூன் என்று கிடையாது. அதிகப்பட்சம் இரண்டு இனிப்புகள், ஒரு வாய் மட்டுமே சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களை இதுபோன்ற இனிப்புகள் உடல்நலப் பிரச்னையை தூண்டும் என்றால், அதை வாங்கவே வாங்கதீர்கள். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். அப்படி சமைக்கும் போது, நாம் பாதுகாப்புடன் உணர்வோம் மற்றும் பிரச்னையும் ஏற்படாது. அளவாக சாப்பிட்டு மனநிறைவு காணலாம்.
