Asianet News TamilAsianet News Tamil

அடிக்கடி வெளுத்துப் போகும் துணிகளை; மீண்டும் புதியது போல மாற்றுவது எப்படி?

துணிகளை பராமரிப்பது என்றால் துவைப்பது, காயவைப்பது, இஸ்திரி போடுவது, மடித்து வைப்பது என்பன கிடையாது. அதையும் தாண்டி ஒருசில விஷயங்கள் உள்ளன. 

simple tips to Bleached fabric into new clothes by dyeing at home
Author
First Published Oct 21, 2022, 11:47 PM IST

பெரும்பான்மையான நேரங்களில் புதியதாக வாங்கப்படும் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற பணியின் துணிகள் விரைவாக வெளுத்துப் போகும் நிலைக்கு சென்றுவிடும். இதனால் ஆசை ஆசையாக வாங்கிய துணிகளை நாள் கணக்கில் போட முடியாத துயரம் நம்மில் பலருக்கும் உண்டு. மற்ற பொருட்களை போன்ற் தான் துணிகள் தான் என்பதை பலரும் புரிந்துகொள்வது கிடையாது. முறையாக பராமரித்தால் துணி மணிகள் நீண்ட நாட்களுக்கு வரும். குறிப்பாக பணியன் துணிகள். அவற்றை பார்த்துப் பார்த்துப் பராமரித்து வர வேண்டும். அப்போதுதான் குறைந்தது ஒரு ஆண்டாவது நன்றாக இருக்கும். பராமரிப்பது என்றால் துவைப்பது, காயவைப்பது, இஸ்திரி போடுவது, மடித்து வைப்பது என்பன கிடையாது. அதையும் தாண்டி ஒருசில விஷயங்கள் உள்ளன. அதை செய்யும் போது, சாதாரண துணி கூட பெரிய பிராண்டு துணிப் போன்று நீண்ட நாட்கள் நமக்கு பயனளிக்கும்.

சுடு தண்ணீர்

இரண்டு நடு அளவிலான தேக்சாவில் தனித்தனியாக சுடு தண்ணீர் காய வைத்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்துவிடக்கூடாது, கைப் பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பாக இருப்பது அவசியம். அவை இரண்டையும் இருவேறு வாளிகளில் தனித்தனியாக ஊற்றிக் கொள்ள வேண்டும். கொஞ்சம் ஆறவிடுவதும் நல்லதுதான். எனினும் உங்களால் தண்ணீரின் சூட்டை தாங்க முடியும் என்றால், அப்படியே செயல்முறையை துவங்கலாம்.

உப்பு

வெளுத்துப்போன உடைகளை புதிது போல இருப்பதற்கு மூன்று பொருட்கள் முக்கியமாக தேவை. அவை சுடு தண்ணீர், கல் உப்பு மற்றும் சாயத் தூள் ஆகும். முதலில் வாளியில் இருக்கும் சுடு தண்ணீரில் ஒரு பிடி கல்லுப்பை போட்டுக் கொள்ளவும். அதை கரைந்ததும் உங்களுக்கு வேண்டிய நிறத்தில் இருக்கும் சாயத் தூளை உள்ளே போடவும். கையை வைத்து கலக்காமல் ஏதேனும் உறுதியான குச்சையை வைத்து தண்ணீரை நன்கு கலந்துவிடவும்.

சாயத் தூள்

துணிகளுக்கு பயன்படுத்தப்படும் சாயத் தூள் மளிகைக் கடைகளில் கூட சாதாரணமாக கிடைக்கும். ரூ. 10-ல் இருந்து ரூ. 15-க்குள் தான் விலை இருக்கும். நீங்கள் கொஞ்சம் அடர் நிறங்களில் இருக்கும் சாயத் தூள்களை பயன்படுத்துவது தல்லது. கருப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்கள் கொஞ்சம் எடுப்பாக இருக்கும். சாயத் தூள்களை குழந்தைகள் கண்களில் படாதபடி வைக்கவும். அதேபோன்று நீங்கள் இந்த செயல்முறையை செய்கையில், குழந்தைகள் அருகாமையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

திடீரென்று நாய் கடித்தால் என்ன செய்யலாம்..?? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

காய வைத்து எடுக்கவும்

சாயம் கலந்த தண்ணீரில் குறைந்தது 20 நிமிடங்கள் வரை ஆடைகள் ஊறிவிட வேண்டும். அதை அடுத்து நிழலில் வைத்து உலர்த்தி எடுங்கள். நன்றாக உலர்ந்த பின் பார்த்தால் சாயம் போட்ட ஆடைகள் புதியது போன்று இருக்கும். இதை நீங்கள் இஸ்திரி போட்டு மடித்து வைத்துக்கொள்ளலாம். இந்த ஆடைகளை அடுத்தடுத்து நீங்கள் துவைக்கும் போது சாயம் போகத்தான் செய்யும். மீண்டும் வெளுத்துப் போகும் நிலைக்கு வந்தால், ஆடைகளுக்கு மீண்டும் சாயம் போட்டுக் கொள்ளலாம். இதுதான் துணிகளை பராமரிக்கும் முறை ஆகும்.

தினமும் செல்ஃபி எடுத்துப் பாருங்கள்..!! அற்புதம் ஏற்படும் நம்புங்கள்..!!

ஒரே நிறமாக இருந்தால் வசதி

நீங்கள் சாயம் போட்டு வெளுக்கும் துணி ஒரே நிறத்தில் இருந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும். கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சுடிதார் டாப், டிசைனிங் பிளவுஸ் என்றால் சற்று கடினம். எனினும் காட்டன் சேலைகள், சட்டைகள் போன்றவை ஒரே நிறங்களில் மட்டுமே அதிகம் கிடைக்கும். அதற்கு இதுபோன்ற துணி பராமரிப்பு முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பனியன்கள், ஷார்ட்ஸ் போன்றவற்றை வெளுக்கும் போதும், ஒரே நிறத்தில் இருந்தால் வேலை எளிதாக முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios