கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டஞ்சேரி, மருதோங்கரா உள்ளிட்ட 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Nipah virus in Kerala has high death rate Bangladesh variant.. These are the symptoms.. Rya

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக 2 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் “ தற்போது கேரளாவில் காணப்படும் வைரஸ் வகை வங்காளதேச மாறுபாடாகும், இது மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது. இதன் தொற்று விகிதம் குறைவாக இருந்தாலும், அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

கேரள சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நிபா வைரஸ் காரணமாக இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 130 க்கும் மேற்பட்டோருக்கு நிபா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வெளவால்கள், பன்றிகள் அல்லது பிற நபர்களின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டஞ்சேரி, மருதோங்கரா, திருவள்ளூர், குட்டியடி, காயக்கொடி, வில்லியப்பள்ளி மற்றும் கவிலும்பாறை ஆகிய ஏழு கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிபா வைரஸ் பீதி : 7 கிராமங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு.. பள்ளிகள் மூடல்..

இதற்கிடையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்தின் குழுவினர் கேரளா வர உள்ளதாகவும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நிபா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் வவ்வால்கள் கணக்கெடுப்பு நடத்தவும் நடமாடும் ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் எப்படி ஏற்படுகிறது?

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நிபா வைரஸ் பழ வெளவால்களால் மூலம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிய உடல் தொடர்பு மூலமாகவும், குறிப்பாக உடல் திரவங்களுடனான தொடர்பு மூலமாகவும் இந்த வைரஸ் பாதிப்பு மனிதர்களுக்கு ஏற்படலாம். வெளவால் சிறுநீர் அல்லது உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவது மூலம் இந்த வைரஸ் பரவுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நிபா வைரஸின் அறிகுறிகள்

  • சுவாச பிரச்சனைகள்
  • வைரஸ் காய்ச்சல்
  • தலைவலி
  • இருமல்
  • தசை வலி
  • தலைவலி
  • காய்ச்சல்
  • தலைச்சுற்றல்
  • குமட்டல் 
  • சிகிச்சை

என்ன சிகிச்சை?

தற்போது, நிபா வைரஸ் தொற்றை குணப்படுத்த மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதே கவலைக்குரிய விஷயம். உலக சுகாதார அமைப்பின், அவசர நடவடிக்கை தேவைப்படும் தொற்றுநோய் பட்டியலில் உள்ள நோய்க்கிருமிகளில் நிபா வைரஸ் ஒன்றாகும். இருப்பினும், நிபா வைரஸ் நோயினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் அல்லது ஆபத்தை குறைக்க ரிபாவிரின் என்ற ஆன்டிவைரல் மருந்து பயன்படுத்தப்படுகிறது. நோய கண்டறிந்த உடன், அந்த அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தடுக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios