சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஃப்ரெஞ்ச் ப்ரை தொடர்ந்து சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்து 20% அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளன. இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
ஃப்ரெஞ்ச் ப்ரை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் நாவிலும் எச்சில் ஊறும். இந்த சுவையான குப்பை உணவுதான் உலகம் முழுவதும் பலரும் விரும்பமான உணவுகளில் ஒன்றாகும். நீங்கள் வாரத்திற்கு நாலு ஐந்து வாட்டி ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடும் நபர் என்றால் முதலில் இந்த பதிவை படியுங்கள். ஏனெனில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஃப்ரெஞ்ச் ப்ரை டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை 20% அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளனர் என்று பிஎம்ஜே இதழில் வெளிவந்துள்ளது.
புதிய ஆய்வு :
அமெரிக்காவை அடித்தளமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வில் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்ட்வேர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வின் தொடக்கத்தில் சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய் இல்லாத 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் வினாத்தாள்களை பகிர்ந்து ஆய்வு செய்தனர். நீண்ட காலமாக மூன்று தசாப்தங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் 22, 300 பங்கேற்பாளர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பிரெஞ்சு ப்ரையும்! டைப் 2 நீரிழிவு நோயும்!
பொதுவாக பிரெஞ்சு ப்ரை அதிக வெப்ப நிலையில் எண்ணெயில் பொறித்தெடுக்கப்படுகிறது. இதனால் உருளைக்கிழங்கில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மறுபடுகின்றது. மேலும் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பிற தீங்கு விளைவுக்கும் சேர்மங்கள் அந்த எண்ணெயில் இருப்பதால், அவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தி ரத்த நாளங்களை சேதப்படுத்தி, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். மேலும் இது அதிக கிளைசெமிக் குறியீடை கொண்டுள்ளதால் ரத்த சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. எனவே சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைத்தால் பிரெஞ்சு ப்ரை சாப்பிடுவது முழுமையாக கைவிடுவது நல்லது. விரும்பினால் மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள். அது பாதுகாப்பானது தான்.
உருளைக்கிழங்கிற்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு:
உருளைக்கிழங்கில் மாவு சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு அதிகம் உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் இதை அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உருளைக்கிழங்கிற்கும் டைப் 2 சர்க்கரை நோய்க்கும் இடையேயான தொடர்பு குறித்த முந்தைய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உருளைக்கிழங்கு சமைக்கும் முறைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் பிரெஞ்சு ப்ரையும் அடங்கும்.
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிட கூடாதா?
சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் அதிக கிளசெமிக் இன்டெக்ஸ் மற்றும் ஸ்டார்ச் உள்ளதால் சரியான முறையில் சாப்பிட வேண்டும். எனவே சர்க்கரை நோயாளிகள் வேகவைத்த, மசித்த, சுட்ட உருளை மிதமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து அதிகம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரை நோய் வருவதை தடுக்க என்ன சாப்பிடலாம்?
சர்க்கரை நோயாளிகள் பிரெஞ்சு ப்ரை போன்ற குப்பை உணவுகளுக்கு பதிலாக முழு தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள், கொட்டைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் முட்டை, மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
