அதிக முறை உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா மாறுபாடு.. எத்தனை நாடுகளில் பரவி உள்ளது?

கொரோனா வைரஸின் இந்த புதிய உருமாறிய கொரோனாவை கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

New covid variant that highly mutated found in 3 countries who released important information

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தாலும் புதிய மாறுபாடுகள் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸின் இந்த புதிய உருமாறிய கொரோனாவை கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாறுபாட்டுக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது இஸ்ரேல், டென்மார்க் மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமூகவலைதளமான X இல் இதுகுறித்து பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ."CDC கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸின் புதிய பரம்பரையை கண்காணித்து வருகிறது. இந்த பரம்பரைக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாறுபாடு குறித்து மேலும் தகவல்களை சேகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை எழுந்த உடனே காபி குடிப்பீங்களா? அப்ப இந்த விஷயங்களை செய்ய மறக்காதீங்க..

இதனிடையே BA.2.86 ஐ "கண்காணிப்பில் உள்ள மாறுபாடு" என வகைப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. மேலும் இது அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும், இதுவரை, ஒரு சில நாடுகளில் இருந்து மாறுபாட்டின் சில வரிசைகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை ஏற்படுத்தும் வைரஸ், காலப்போக்கில் மாறுகிறது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,  பெரும்பாலான மாற்றங்கள் வைரஸின் பண்புகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில மாற்றங்கள் வைரஸின் பண்புகளை பாதிக்கலாம், அது எவ்வளவு எளிதில் பரவுகிறது, அதனுடன் தொடர்புடைய நோயின் தீவிரம் அல்லது தடுப்பூசிகளின் செயல்திறன், சிகிச்சை மருந்துகள் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் BA.2.86 மாறூபாட்டின் தன்மை மற்றும் அதன் பரவலின் அளவைப் புரிந்து கொள்ள கூடுதல் தரவு தேவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் பிறழ்வுகளின் எண்ணிக்கை கவனத்தை ஈர்க்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் “ நாங்கள் தற்போது 3 ஆர்வமுள்ள வகைகளையும் 7 வகைகளையும் கண்காணித்து வருகிறோம்.  இந்த வைரஸ் தொடர்ந்து பரவி வளர்ச்சியடைந்து வருவதால், கொரோனாவை கண்காணிக்கவும் மரபணு சோதனை குறித்து அறிக்கைகளை அளிக்கவும் உலக நாடுகளை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் மெத்தடிஸ்டில் உள்ள நோயறிதல் நுண்ணுயிரியல் மருத்துவ இயக்குநர் டாக்டர். எஸ். வெஸ்லி லாங், இதுகுறித்து பேசிய போது, தற்போது ஆதிக்கம் செலுத்தும் XXB.1.5 கோவிட் மாறுபாட்டிலிருந்து 36 முறை உருமாற்றம் அடைந்துள்ளது. எனினும் இந்த BB.2.86 மாறுபாடு கொரோனா வைரஸின் பிற விகாரங்களை விஞ்ச முடியுமா அல்லது முந்தைய தொற்று அல்லது தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிப்பதில் ஏதேனும் நன்மை உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios