Asianet News TamilAsianet News Tamil

Weight Loss Tips : சோம்பு, கரிசிலாங்கண்ணி, இஞ்சி இருந்தால் போதும்- உடல் எடையை எளிதில் குறைக்கலாம்..!!

இந்தியாவில் உடல் பருமன் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் முதல் இளைய தலைமுறையினர் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதியுற்று வருகின்றனர். இதனால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்துள்ள பலர், உடல் எடையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உடற்பயிற்சி செய்வது, பத்தியம் இருப்பது, நோன்பு மேற்கொள்வது போன்றவற்றை பலரும் பின்பற்றி வருகின்றனர். தினசரி 3 வேளைக்கு பதிலாக 2 அல்லது ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவது, வெறும் கொழுப்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு சாப்பிடுவது போன்ற செயல்பாடுகள் முக்கிய பத்திய உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் பட்ஜெட் முறையில் உடலை குறைக்க முடியுமா என்கிற கோணத்தில் தான் பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களை வைத்து உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

natural remedies to help reduce obesity
Author
First Published Sep 12, 2022, 3:59 PM IST

கரிசலாங்கண்ணி மற்றும் கேரட்

மஞ்சள் காமாலைக்கு கரிசலாங்கண்ணி இலைகள் நல்ல பயனை தரும். கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து ஆட்டுப்பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதன்மூலம் காமலை ஓடிப் போகும். வெறும் மஞ்சள் காமாலைக்கு மட்டுமில்லாமல் உடல் எடையை குறைப்பதற்கும் கரிசலாங்கண்ணி பயன்படுகிறது. பாசிப் பருப்புடன் வேக வைத்து கரிசலாங்கண்ணியை சமைத்து சாப்பிட வேண்டும். தினமும் இதை உட்கொண்டு வருவது உடல் எடையை விரைவாக குறைக்க உதவிடும். மேலும் இந்த சாறை கேரட்டுடன் சேர்த்து தேன் கலந்து சாப்பிடுவதும் விரைவாக உடல் எடையை குறைக்கும்.

சோம்பும் தேனும்

ஒரு கைப்பிடி சோம்பை எடுத்து , நன்றாக அழுக்கு நீக்கி சுத்தம் செய்துவிட வேண்டும். அடுப்பில் வால் பாத்திரம் ஒன்றில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள ஒரு கைப் பிடி சோம்பை, வெதுவெதுப்பான அந்த தண்ணீரில் போட வேண்டும். இதை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். மேலும் தினசரி சாப்பாட்டுக்கு ஒரு முறை, ஒரு வேளை மட்டும் ஒரு தேக்கரண்டி தேனை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் கெட்டக் கொழுப்பு குறையும்.

natural remedies to help reduce obesity

நெல்லியும் இஞ்சியும்

மரநெல்லிக்காயில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. ஒரேயொரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவோர் எப்போதும் இளமையுடன் இருப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. தினசரி மரநெல்லிக்காய் சாப்பிடுபவருக்கு ரத்தத்தில் சக்கரை அளவு குறையும், ரத்தம் சுத்தமாகும் பல்வேறு இதரச் சத்துகளும் கூடும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து, அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன்பு குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!
 

ஆமணக்கும் பாதாம் பவுடர்

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால்  உடல் பருமன் குறையும். பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios