சுகப்பிரசவம் ஆனால் கூட சில பிரச்சனைகள் வரும் என்பது உண்மையா? அப்போ சிசேரியன் பண்ணா என்ன ஆகும்!!

சுகப்பிரசவம் குறித்த பல கட்டுக்கதைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன அதன் உண்மை தன்மை குறித்து இங்கு விரிவாக காணலாம். 

Myths about Normal Deliveries

கருவுற்ற பெண்களுக்கு அந்த மாதங்கள் கொஞ்சம் அசௌகரியமானது. இதனிடையே அவர்களுக்கு பிரசவ பயம் வேறு இருக்கும். இந்த நேரத்தில் சுகப்பிரசவமா? சி-பிரிவு என்ற சிசேரியானா என்பது அவர்களுக்கு இன்னும் சிக்கலான மனநிலையை கொடுக்கும். சில கேள்விகளுக்கு சரியான பதிலை மருத்துவரால் தான் தரமுடியும். அந்த நேரத்தில் அவர்களிடம் சென்று வீண் கட்டுக்கதைகளை பேசவே கூடாது. உதாரணமாக, சி - பிரிவு செய்வதுதான் வசதியானது, குழந்தைகளுக்கு சுகப்பிரசவம் பாதுகாப்பானது அல்ல, சுகப்பிரசவம் செய்தால் உடலுறவு கொள்ள முடியாது? உள்ளிட்ட பல கதைகள் உலவி வருகின்றன. இதில் எது உண்மை, எது பொய் என்பது குறித்து இங்கு காணலாம். 

கட்டுக்கதை - தாங்கி கொள்ள முடியாத அளவு பிரசவ வலி அதிகமாக இருக்கும். 

உண்மை என்ன?? - பிரசவத்தின் போது வலி இருக்கும். ஆனால் அதை தாங்குவதற்கு உண்டான வலிமை கருவுற்ற பெண்களுக்கு கிடைத்துவிடும். கடுமையான வலி இருந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதற்கேற்ற சிகிச்சையை செய்வார்கள். இன்றைய காலகட்டத்தில், பிரசவ பயத்தை போக்கி அதற்கு தயார் செய்ய வகுப்புகள் கூட இருக்கின்றன. இந்த வகுப்பில் கர்ப்பிணிக்கும் அவரது துணைக்கும் வலியை கட்டுப்படுத்த உதவக்கூடிய உடற்பயிற்சிகள், சுவாச பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும். 

கட்டுக்கதை - சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு ஏற்படுமா? 

உண்மை நிலவரம்: சுகபிரசவத்திற்கு பின் பெண்களுடைய யோனியும் தளர்ந்துவிடும். சுகப்பிரசவத்தின் பின்னர் பெண்களுக்கு பாலியல் விருப்பம் குறைவதாகவும், பாலியக் செயலிழப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதெல்லாம் தற்காலிகமானது தான். சுகப்பிரசவம் மட்டுமல்ல, சிசேரியன் ஆனாலும் இதே மாதிரியான பாலியல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் சரிசமமாக உள்ளது. ஆனால் ஆய்வுகளின்படி, சுகப்பிரசவ முறை பாலுறவு குறைபாட்டில் தொடர்புடையதாக இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. 

​கட்டுக்கதை- சுகப்பிரசவம் என்றால் அது குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்காது! 

உண்மை என்ன? : அண்மை காலமாக மக்கள் மனதில் சுகப்பிரசவம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்ற எண்ணம் பரவி வருகிறது. ஆனால் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கருத்துக்களின்படி, சுகப்பிரசவங்கள் தான் பாதுகாப்பானவை. சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள் அபாயம் குறைவாகவே இருக்கும். இந்த குழந்தைகளுக்கு ஒவ்வாமை, நீரிழிவு, உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கலாம். 

கட்டுக்கதை- பிரசவ வலி வராத பெண்களுக்கு சிசேரியன் தான் தீர்வா? 

உண்மை நிலவரம் : கருவுற்ற பெண்ணுக்கு இயற்கையான பிரசவ வலி வரவில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு வலி தாமதமாக இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே பிரசவத் தூண்டல் இருக்கும். இது சற்று அசாதாரணமானது. எல்லோருக்கும் இப்படி நடக்காது. மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட தூண்டுதல்கள், முதல் பிரசவம், கர்ப்ப வாரம் 39 வாரங்களை கடந்திருத்தல் குறிப்பாக கடைசி நேரத்தில் தேவைப்பாட்டால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மற்றபடி மருத்துவர்கள் சுகப்பிரசவத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.  

normal delivery vs Caesarean

கட்டுக்கதை - சுகப்பிரசவம் ஆகும் போது குழந்தையுடைய கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி கொள்ளும் என்கிறார்களே?! 

உண்மை என்ன?: குழந்தையினுடைய கழுத்தை சுற்றி இருக்கும் அந்த தண்டு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. குழந்தை பெண்ணுறுப்பின் வழியே வெளியே வர இது போதுமானது. கருவுற்ற காலத்தில் குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த தண்டு வளையம் தளர்வாக இருக்கும். பயப்படத் தேவையில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பிறப்பு கால்வாய் மூலமாக ஆரோக்கியமாக நகரும். பெண்களின் பிரசவ காலங்களில் இது தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஒருவேளை கருவுக்கு அபாயமான ஏதேனும் நிகழ்வது போன்று இருந்தால் அப்போது அறுவை சிகிச்சை செய்வார்கள். 

இதையும் படிங்க: இரவில் ஒழுங்காக தூங்கவில்லை என்றால் ஆஸ்துமா!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

கட்டுக்கதை - முதல் குழந்தை சிசேரியன் மூலம் பெற்றால் இரண்டாவது குழந்தையும் சிசேரியன் மூலம் தான் பிறக்குமா? 

உண்மை என்ன?: இது நிஜமில்லை. முதல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தால், அடுத்து பிறக்கும் குழந்தைகளும் சிசேரியன் தான் என சிலர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் முதல் குழந்தை சிசேரியனாக இருந்தாலும் சில ஆண்டுகளுக்கு பின்னர் பிறக்கும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக கூட மாறலாம்.

கட்டுக்கதை- சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் பிரிவு எளிமையானது, வசதியாக இருக்கும் என்கிறார்களே? 

உண்மை என்ன?: அறுவை சிகிச்சை (சிசேரியன் பிரிவு) என்றால் வயிறு, கருப்பையில் கீறல்கள் ஏற்படுத்தி அதன் வழியாக குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதை மயக்க நிலையில் செய்வார்கள். ஆனால் சுகப்பிரசவம் வலியை உண்டாக்கும். அதுவே எதிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்கும். அறுவை சிகிச்சையானது பிரசவ வலியை கொடுக்காவிட்டாலும், முதுகுவலி மாதிரியான பக்கவிளைவுகள் உண்டாக்கும். 

இதையும் படிங்க: அடிக்கடி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்துக்கோங்க! இந்த அற்புத இலை உங்க உடலை எப்படி மாற்றும் தெரியுமா? இவ்ளோ நன்மைகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios