மூட்டு வலியால் முடங்கி இருக்கீங்களா? அப்ப 'முடவாட்டுக்கால் கிழங்கு' சூப் குடிங்க...!!
மூட்டு வலி முடக்கு வாதத்தால் முடங்கி கிடக்கிறீங்களா? உங்களுக்கான அற்புதமான தீர்வுதான் முடவாட்டுக்கால் கிழங்கு. இந்தக் கிழங்கை சூப் வைத்து குடித்தால் மூட்டு வலி ஒருபோதும் வராது.
முடவாட்டுக்கால் கிழங்கு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பார்ப்பதற்கு ஆட்டுக்கால் மாதிரியே இருக்கும். ஆனால் இது ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது ஆகும். பொதுவாகவே இந்த கிழங்கு மலை அடிவாரத்தில் தான் வளரும், அதுவும் இரண்டு பாறைகளுக்கு இடையே வளரக்கூடிய ஒரு தாவரம் ஆகும். மேலும் இந்தக் கிழங்கு குளிர்ச்சியான இடத்தில் தான் வளரும். அந்த வகையில் இந்த கிழங்கின் மருத்துவ பயன்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கின் மருத்துவ பயன்கள்:
முடவாட்டுக்கால் கிழங்கு மூட்டு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம் ஆகும். மேலும் இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாத நோய்க்கு அருமருந்து ஆகும். அதுபோல் கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றையும் குணப்படுத்த இது உதவுகிறது. குறிப்பாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிழங்கை சூப் வைத்து குடிக்கலாம்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம்..இந்த 3 பொருள் போதும்.. இனி மூட்டு வலிக்கு குட்பை சொல்லுங்க...
முடவாட்டுக்கால் கிழங்கு சூப்:
முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் தயாரிக்க முதலில் 25 முதல் 30 கிராம் வரை இந்த கிழங்கினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு இஞ்சி சுக்கு, மிளகு தக்காளி உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சூப் தயாரித்து குடிக்கலாம்.
இதையும் படிங்க: மூட்டு வலியால் அவதிப்படுறீங்களா? சிறந்த வீட்டு வைத்தியம் இதோ..இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம்...!
இந்த முறையில் குடிப்பது நல்லது:
இந்த சூப்பை நீங்கள் 3 மணி முதல் 4 மணிக்குள் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் இரவில் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் கை, கால் வலி உடம்பு வலி போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். மூட்டு வலி முடக்கு வாதம் இருந்தால் இந்த சூப்பினை நீங்கள் தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.