மாத்திரையின் நிறங்களுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கா?

வெவ்வேறு நிறங்களில் மாத்திரைகள் காணப்படுவதற்கு காரணங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

Medicine Colour reasons in tamil

உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும்போது மருத்துவர் பல நிறங்களில் மாத்திரங்களை கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். மாத்திரைகளின் நிறங்களுக்கும், நோய்க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? ஏன் மாத்திரைகள் பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மூலிகை மருந்து 

அறிவியல் இந்த அளவுக்கு நவீனமாகும் முன்பு மூலிகைகளை மக்கள் மருந்தாக பயன்படுத்தினர். அதன் பின்னர் மூலிகை செடிகளில் இருந்து சாறு எடுத்து மருந்து தயாரித்தனர். அதையடுத்து அவற்றை பொடியாக்கி மாத்திரைகள் தயாரித்தனர். எகிப்திய நாகரீகத்தின் போதுதான் முதன்முதலில் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்காலத்தில் அந்த மருந்துகள் களிமண்ணில் அல்லது ரொட்டியில் கலந்து தயாரிக்கப்பட்டன.

ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கிய பிறகு, 1960ஆம் ஆண்டு வாக்கில், வெள்ளை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டன. உயர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மருந்துகள் தயாரிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1975ஆம் ஆண்டில், வண்ணங்களுடைய மாத்திரை தயாரிப்புகள் பரவலாகின. மருந்துகளின் நிறத்தில் பல்வேறு வண்ணங்கள் சேர்க்கப்பட்டன. இப்போது மருந்து கடைகளை பார்த்தால் பல வண்ணங்களில் மருந்துகள் விற்கப்படுவதைக் காணலாம். 

பல வண்ணங்களில் ஏன் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன? 

அறிக்கையின்படி, இப்போது 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணங்களில் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், மாத்திரையின் தோற்றத்திற்கு வெவ்வேறு வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் ஏன் நிறங்களோடு தயாரிக்கப்படுகின்றன? மருந்துகளின் பெயர்களைப் படித்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவர்கள், அவற்றின் நிறத்தைப் பார்த்து மருந்துகளை எளிதில் வேறுபடுத்திக் கொள்ளலாம் என்பதால் இப்படி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சரியான மருந்தைக் கண்டறிவது அவர்களுக்கு எளிதாகிறது. 

இதையும் படிங்க: வெள்ளரிக்காய் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.!

மருந்துகளின் நிறம் நோய்களுடன் தொடர்புடையதா? 

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், மருந்துகளின் நிறத்திற்கும், நோய்களுக்கும் சில தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறைவான வீரியமுள்ள மருந்துகளை கொடுக்க வேண்டிய நோய்களுக்கு, அவற்றின் நிறம் பளிச் என்று வைக்கப்படுகிறது. உடனடி தீர்வுக்காக கொடுக்கப்படும் வீரியம் மிக்க மாத்திரையின் நிறம் நிறம் அடர்த்தியாக இருக்கும். வாசனை, சுவையின் அடிப்படையில் மருந்துகளின் நிறமும் தீர்மானிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: ரத்தசோகை முதல் கெட்ட கொழுப்பு வரை.. 'கருப்பு நிற உலர் திராட்சை' உண்பதால் நீங்கும் பிரச்சனைகள்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios