மெட்ராஸ் ஐ அறிகுறிகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Madras Eye Symptoms and Prevention Tips : 'மெட்ராஸ் ஐ' (Madras Eye ) என்பது மழைக்காலங்களில் அதிகமாக கண்களில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஆகும். சில தொற்றுகள் சாதாரணமானவையாக இருக்கும், சில தொற்றுக்கலோ கண் பார்வையை பறிக்கும் அளவுக்கு வீரியம் கொண்டவை என்று மருத்துவர்கள் சொல்லுகின்றனர். எனவே மெட்ராஸ் ஐ யின் அறிகுறிகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மெட்ராஸ் ஐ வர காரணங்கள் என்ன?
மெட்ராஸ் ஐ பொதுவாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று மூலம் தான் பரவும். நூற்றுக்கும் மேற்பட்ட வைரஸ்கள் இருந்தாலும் அதில் சிலவற்றால் தான் கருவிழி பாதிக்கப்படும். இந்தக் கண் நோய்க்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் சரியாகிவிடும். மழை மற்றும் குளிர்கால பருவங்களில் தான் இது அதிகம் ஏற்படுகிறது.
மெட்ராஸ் ஐ அறிகுறிகள்:
- கண் சிவந்து வலி, எரிச்சல் ஏற்படும்
- கண் உறுத்தல் மற்றும் அரிப்பு
- கண்ணில் பூழைக் கட்டுதல்
- கண்ணில் அதிகமாக நீர் வடிதல்
- கண் இமைகளில் வீக்கம்
- தூங்கி எழும்போது கண்கள் ஒட்டிக் கொள்வது
- அதிக வெளிச்சத்தை பார்க்க முடியாது
- சில சமயங்களில் மெட்ராஸ் ஐ-யை ஏற்படுத்தும் வைரஸால் ஜலதோஷம் வரும்
- குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும்
மெட்ராஸ் ஐ-க்கு சிகிச்சை:
- மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டால் கண்களை ஒருபோதும் கேட்க வேண்டாம் மற்றும் கைகளால் தொடக்கூடாது.
- ஒரு சுத்தமான துணி அல்லது கைக்குட்டை கொண்டு கண்களை துடைக்க வேண்டும்.
- அட நிறக் கண்ணாடியை அணிந்தால் பாதிப்பிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.
- காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் அவற்றை உடனே பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
- இந்த கண் பிரச்சனை பாக்டீரியாவால் ஏற்பட்டால் அவற்றின் தீவிரத்தை பொறுத்து அதற்குரிய மருந்தை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
- கண் தொற்று பரவாமல் தடுக்க கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
- கைகளால் கண்களை தேய்க்க வேண்டாம் இல்லையெனில் தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளன.
- தொற்று இருக்கும்போது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- கண்ணாடி அணிவதன் மூலம் தொற்றுப் பரவுவதைத் தடுக்கலாம்.
- ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- வீட்டு வைத்தியத்தைத் தவிர்த்து மருத்துவமனிடம் ஆலோசனை பெற்று சிகிச்சையை எடுத்துக் கொள்வது தான் நல்லது.
- குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ வந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் தொற்று பரவலை தடுக்கலாம்.
