பாகற்காயின் டீ போட்டு குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா..??
பாகற்காயில் இல்லாத சத்துக்களே இல்லை என்று சொல்லலாம். எனினும், அதை சாப்பிடுபவர்கள் வெகு சிலர் தான். ஒவ்வொரு வீடுகளிலும் ஊர்களிலும் பாகற்காயை சாப்பிடுபவர்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். பல்வேறு நன்மைகள் ஏதாவது ஒன்றை இழப்பது மூலம் தான் கிடைக்கும் என்கிற பழமொழி சொல்படுவதுண்டு. சுவையை எதிர்பார்த்தால் பாகற்காய் மூலம் எந்த நன்மையும் கிடைக்காது. எப்படி சமைத்தாலும் பாகற்காயின் கசப்பு சுவையை போக வைக்கவும் முடியும். கசப்பு சுவை இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும் என்று சமைத்தால், அது பாகற்காயே கிடையாது. இப்படி பல சிறப்புகளும், நன்மைகளும் அதே சமயத்தில் சில கசப்புகளையும் தரக்கூடிய பாகற்காயை டீ-யாக செய்து சாப்பிடலாம் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
பாகற்காய் செய்யும் நன்மைகள்
பாகற்காய் டீ குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, அதன்மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்துகொள்வோம். பாகற்காயை வாரமிருமுறை எடுத்துக்கொண்டால் கல்லீரல் சுத்தமாகும், ரத்தத்தில் சக்கரை அளவு கட்டுக்குள் வந்து ரத்தோட்டம் விருத்தி அடையும். மேலும் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பு குறைந்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் பாகற்காய் துணை புரிகிறது
பாகற்காயை சமைக்கும் முறைகள்
எல்லா காய்கறிகளையும் போல பாகற்காயிலும் குழம்பு, கூட்டு, பொரியல் போன்றவற்றை தாரளமாக செய்யலாம். புளிக்குழம்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்யப்படு கூட்டு, வறுவல், சிப்ஸ், பக்கோடா மற்றும் வற்றல் போன்றவற்றை சமைத்து சாப்பிடலாம். இது மட்டுமில்லாமல் பாகற்காயில் சுவையான ஒரு டீயை தயாரிக்க முடியும் என்று பலருக்கும் புது தகவலாக இருக்கலாம். இதை சாப்பிடுவதால் பல நன்மைகளும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்
உடலில் பசி அதிகமாக எடுப்பது போன்று உணர்வு ஏற்பட 5 காரணங்கள்..!!
பாகற்காய் டீ-க்கான செயல்முறை
எப்போதும் சமைப்பது போல பாகற்காயை முதலில் தோல் சீவிக் கொள்ளவும். அதை நறுக்கி விதைகளை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அதன்மூலம் பாகற்காயின் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கும். பின்னர் அந்த சாறினை வடிகட்டி எடுத்தால் உடலுக்கு நன்மை தரும் இதுதான் பாகற்காய் டீ தயார்.
பாகற்காய் டீ-யில் கசப்பு தெரியாது.
பாகற்காய் டீ-யில் கசப்பு தெரியாமல் இருக்க சிறிது நாட்டுச் சக்கரையை சேர்க்கலாம். பாகற்காயும் நாட்டுச் சக்கரையும் நல்ல காம்பினேஷனாகும். முடிந்தால் நீரிழிவு நோயாளிகள் சக்கரையை தவிரித்துவிடுவது நல்டஹு. அவர்கள் காய்ச்சிய பாகற்காய் தண்ணீரை அப்படியே குடிப்பதால் நல்ல நலன் தரும். இந்த டீ-யை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.
எப்போதும் குப்புற படுத்து கிடப்பவரா நீங்கள்..? இதப்படிச்ச இனி அப்படி செய்யமாட்டீங்க..!!
பாகற்காய் டீ-யால் கிடைக்கும் பலன்கள்
இந்த டீயை வாரமிருமுறை குடித்து வருவதன் மூலம், உடலிலுள்ள தேவையற்ற கொழிப்புகள் எல்லாம் போய்விடும். அதேபோன்று நீரிழிவு நோயாளிகளுக்கு சக்கரையில் அளவு சீராக இருக்கும். மேலும் இதனால் நன்மைகளே தவிர, பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது. இதுவொரு இயற்கை பானமாகும். மேலும் இந்த டீ-யை குடிப்பதால் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, நோய் தாக்கம் எதுவும் ஏற்படலாமல் இருக்கும்.