Asianet News TamilAsianet News Tamil

உடலில் பசி அதிகமாக எடுப்பது போன்று உணர்வு ஏற்பட 5 காரணங்கள்..!!

ஒவ்வொரு உயிர்களின் உடலுக்கும் பசி மிகவும் அத்தியாவசமான ஒன்று. பசியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பசிக்கவில்லை என்றாலும், பசித்துக் கொண்டே இருக்கிறது என்றாலும் பிரச்னை தான். இயல்பை மீறி பசி எடுப்பதற்கு பெயர் பாலிஃபேஜியா. இந்த பிரச்னை கொண்டவர்களுக்கு எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணவு இருக்கும். இதுபோன்று பிரச்னை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

5 important reasons to feel always hungry inside for food
Author
First Published Oct 1, 2022, 3:53 PM IST

உலகத்தின் உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய காரணம் பசி தான். நம்முடைய தினசரி நடவடிக்கைகளும் வேலைகளும் அதன்மூலம் கிடைக்கும் பணமும் அதை தொடர்ந்து ஏற்படும் சேமிப்பும் என்று அனைத்தும் பசியை பின்னணியாகக் கொண்டு தான் இருக்கின்றன. இதன்காரணமாகவே பசியின் ஆக்கத்தையும் பசியை நிறைவுடன் தீர்த்து வைப்பது குறித்தும் நமக்கு சின்னவயது முதலே சொல்லித் தரப்படுகின்றன. சின்னக்குழந்தைகள் ஓடி விளையாடினால் தான் நன்றாக பசிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதற்கு காரணம் ஒவ்வொரு உயிர்களின் உடலுக்கும் பசி மிகவும் அத்தியாவசமான ஒன்று. பசியை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பசிக்கவில்லை என்றாலும், பசித்துக் கொண்டே இருக்கிறது என்றாலும் பிரச்னை தான். இயல்பை மீறி பசி எடுப்பதற்கு பெயர் பாலிஃபேஜியா. இந்த பிரச்னை கொண்டவர்களுக்கு எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணவு இருக்கும். இதுபோன்று பிரச்னை ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்

கார்டிசோல் ஹார்மோன் பாதிப்பு

நமக்குள் ஒருவிதமான பரபரப்பு அல்லது ஆழ்ந்த் வருத்தம் இருக்கும் போது, உடலில் கார்டிசோல் என்கிற ஹார்மோன் மூளையில் சுரக்கும். இதற்கு பசியை தூண்டிவிடும் தன்மை உள்ளது. இதனால் உடலுக்குள் மேலும் பதற்றம் அதிகரித்து, உடனடியாக சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். குறிப்பாக சர்க்கரையும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதற்கு கார்டிசோல் ஹார்மோன் தூண்டும்.

தண்ணீர் குடிப்பது அவசியம்

பசியை கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவுக்கு உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அவ்வப்போது அருந்துவதும் மிகவும் முக்கியம். தண்னீர் தாகம் அதிகமானாலும் பசி எடுத்தாலும், பலருக்கும் அவை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவதில்லை. இந்த இரண்டுக்குமான தேவை அதிகமாக இருக்கும் போது நமக்கு கிரக்கம் மற்றும் சோர்வுநிலை ஏற்படும். அதை போக்க அவ்வப்போது தண்ணீர் குடித்து வரவேண்டும்.

தைராய்டு அதிகமாக சுரப்பதும் ஒருவித காரணம்

தைராய்டு அதிகளவில் சுரக்கும் நபர்களுக்கு உடலில் பசி அதிகமாக ஏற்படும். கழுத்துப் பகுதியில் இருக்கும் ஹார்மோன், உடலிலுள்ள உறுப்புகளை வேலை விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. அதனால் உடலில் பதற்ற உணர்வு ஏற்படும் போதும், வேகமாக இருதயத்துடிப்பு ஏற்படும் போதும் தாகம் எடுக்கிறது. ஒருசிலருக்கு பசி அதிகமாக எடுப்பது போலவும் தோன்றலாம். தைராய்டு அதிகமாக சுரக்கும்போது தசை வலி மற்றும் அதிகமான வியர்வை வெளியேற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கட்டுப்பாடு இல்லாமல் தோன்றும் காம உணர்வுகள்- என்ன செய்யலாம்?

டயட் சோடா குடிப்பவர்களுக்கு இருக்கும் ஆபத்து

உடல் சூழலுக்கு தகுந்தவாறு பத்தியம் இருப்பவர்கள் பலரும் டயட் சோட்டாக்களை வாங்கி குடிக்கின்றனர். இது உடலுக்குள் பசியை அதிகளவில் தூண்டுவிடுகிறது. மேலும் மூளையை வேறு உணவுகளின் மூலமாக கலோரிகளை பெற்றுக்கொள்ளவும் தூண்டுகிறது. இதனால் அதிகளவில் பசி எடுப்பது போன்ற உணர்வு உருவாகிவிடுகிறது. டயட் சோட்டாக்களை குடிப்பதன் விளைவாக  பசி எடுப்பது மட்டுமில்லாமல் தலைவலி, உடல் பருமன், இனிப்பு உண்ணும் உணர்வு போன்ற உணர்வுகளும் அடுத்தடுத்து தோன்றும்.

நன்பகல் நேர உறக்கம் உடலுக்கு நன்மையா...?? தீமையா...??

தூக்கமின்மையால் அதிகரிக்கும் பசி உணர்வு

சரியாக உறங்கவில்லை, போதியநேரம் உறக்கம் நீடிக்கவில்லை, அடிக்கடி உறக்கத்தின் போது விழிப்பு ஏற்பட்டு தடைபடுவது உள்ளிட்ட தூக்கமின்மை சார்ந்த பிரச்னைகளை கொண்டவர்களுக்கு பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்ற. இதன்விளைவாக அவர்களுக்கு பசி உருவாகும். எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு முழுமை பெறாது போன்ற உணர்வும் தூக்கமின்மை காரணமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios