Asianet News TamilAsianet News Tamil

உயிர் போகும் அளவிற்கு வலி தரும் கால் ஆணி...இனி வெட்டி எடுக்க வேண்டாம் 'அம்மான் பச்சரிசி' யூஸ் பண்ணுங்க..!!

கால் ஆணியை விரட்டியடிக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியம் குறித்து இங்கு பார்க்கலாம்.

know amman paccharisi helps to cure kaal aani mks
Author
First Published Sep 8, 2023, 12:27 PM IST

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மக்கள் பலவிதமான நோய்களினால் அவஸ்தப்பட்டு வருகிறார்கள். அதில் சிலவை இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும். ஆனால் இன்னும் சிலவையோ அவர்களை வாட்டி வதைக்கும். உச்சி முதல் பாதம் வரை ஏதாவது ஒரு பிரச்சனையை மக்கள் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒன்று தான் கால் ஆணி. இது பற்றி நீங்க ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். இது வந்தா உயிர் போகுற மாறி வலி ஏற்படும். இதுக்கு சிலர் வைத்தியம் பண்றனு பேர்ல சாவடிப்பார்கள். உதாரணமாக, பண்ணவெல்லத்தை கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து தீக்குச்சியை வைத்து நெருப்பு வைப்பார்கள். இன்னும் சிலரோ, பிளேட் பயன்படுத்தி ஆணி இருக்கும் பகுதியை வெட்டி எடுப்பார்கள். இப்படி எந்தவிதமான கொடுமையும் அனுபவிக்காமல் சுலபமான முறையில் இதற்கு தீர்வு காணலாம்.

அம்மான் பச்சரிசி செடி:
இந்த கால் ஆணிக்கு சிறந்த வைத்தியம் அம்மான் பச்சரிசி செடி ஆகும். இந்த செடியை உடைத்து அதில் இருந்து வரும் பாலை கால் ஆணி இருக்கும் இடத்தில் குணமாகும் வரை தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இவற்றை பயன்படுத்தும் போது முதலில் உங்களுக்கு வலி குறையும். பிறகு போக போக காலில் இருக்கும் ஆணி மறையும்.

கால் ஆணி குணமாக மற்றொரு வழிமுறை:
இதற்கு முதலில் சிறிதளவு மருதாணி இலை மற்றும் மஞ்சள் துண்டு இவை இரண்டையும் மையாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் நெல்லிக்காய் அளவு அதனை உருண்டையாக உருட்டி தூங்குவதற்கு முன் கால் ஆணி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து பத்து நாள் செய்து வந்தால் கால் ஆணி இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து போகும்.

சித்திரமூலம் (கொடிவேலி):
சித்திரமூலம் அல்லது கொடிவேலி இதனை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து நீங்கள் தூங்குவதற்கு முன் கால் ஆணி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும் தொடர்ந்து மூன்று நாள் இப்படி செய்து வந்தால் விரைவில் குணமடைவீர்கள். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சிலருக்கு இவற்றை பயன்படுத்தும் போது அந்த இடத்தில் புண் வரும். எனவே அதற்கு நீங்கள் ஒரு தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து புண் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் விரைவில் புண் ஆறிவிடும். மற்றும் கால் ஆணியும் குணமாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios