இந்தியாவில் பதிவாகும் கோவிட் பாதிப்பு 90% இந்த மாநிலத்தில் தான் உள்ளது..
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 90% கேரளாவில் இருந்து பதிவாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில் கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 479-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதத்தில் திடீரென அதிகரித்துள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வரை 875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 90% கேரளாவில் இருந்து தான் பதிவாகி உள்ளது. நவம்பரில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதன் அறிகுறிகள் 2 மாதங்கள் நீடிப்பதாகவும் மரணம் அரிதாகவே நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. ராஜகிரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சன்னி பி ஆரத்தேல் இதுகுறித்து பேசிய போது “ சுவாச நோய்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களின் பெரும்பாலனவர்களுக்கு H1N1 பாதிப்பு எதிர்மறை என்றும் கொரோனா பாசிட்டிவ் என்றும் முடிவுகள் வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு சில நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறிகள் சில மாதங்கள் வரை கூட நீடிக்கின்றன. காற்று மாசு, காலநிலை மாற்றம் காரணமாக கொரோனா அறிகுறிகள் தீவிரமடைந்து வருகின்றன. ” என்று தெரிவித்தார்.
குளிர்கால மாரடைப்பு: காலை நேரத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஒருபோதும் புறக்கணிக்காதீங்க..
திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையின் தொற்றுநோய் துறை ஆலோசகர் முகமது நியாஸ் இதுகுறித்து பேசிய போது “ தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிக தீவிரமாக இல்லாததால் சமாளிக்க முடிகிறது. கொரோனா தொடர்பான இறப்புகளும் கூறைவாகவே பதிவாகின்றன. எனினும் வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.