Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் JN.1 கோவிட் மாறுபாடு.. அறிகுறிகள் என்ன? நோயில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது?

கேரளாவில் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

JN.1 covid variant in kerala..what are the symptoms? How to protect yourself from disease? Rya
Author
First Published Dec 18, 2023, 8:19 AM IST

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரப்பூர புள்ளிவிவரங்களின்படி, அம்மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் 470 பாதிப்பு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் 825 புதிய பாதிப்புகளும் பதிவாகியுள்ளன, இது இந்தியாவிலேயே அதிக பாதிப்பாகும். இந்த சூழலில் கொரோனா காரணமாக அங்கு ஒருவர் உயிரிழந்ததால் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனாவின் JN.1 மாறுபாடு தான் இந்த அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, புதிய துணை மாறுபாடு குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், கேட்டுக்கொண்டார். ,மேலும் பேசிய அவர் "கவலைப்பட ஒன்றுமில்லை. அது ஒரு துணை மாறுபாடு. இது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களிடம் சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது.

கேரளாவில் தற்போது இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு வரிசைமுறை மூலம் அதைக் கண்டறிய முடியும். கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். ஆனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும், "என்று அவர் கூறினார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி JN.1 கொரோனா மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அம்மாநில அரசு சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், இரைப்பை ஆகியவை இந்த விகாரத்துடன் தொடர்புடைய அறிகுறிகளாகும்.JN.1 முதன்முதலில் அமெ ரிக்காவில் செப்டம்பரில் கண்டறியப்பட்டது, இதை தொடர்ந்து சீனாவில் டிசம்பர் 15 அன்று கண்டறியப்பட்டது. 

இந்தியாவில் கோவிட்-ன் JN.1 வகை

"JN.1.1 வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கேரளாவில் கண்டறியப்பட்டது. டிசம்பர் 8 அன்று தென் மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காரகுளத்தில் இருந்து RT-PCR- கொரோனா பரிசோதனையில் இந்த மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. 79 வயதான பெண்ணுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன.

இந்த மாறுபாடு முதன்முதலில் லக்சம்பர்க்கில் அடையாளம் காணப்பட்டது - இது ஓமிக்ரான் துணை வேரியண்டின் வழித்தோன்றலான பைரோலா மாறுபாட்டின் (BA.2.86) வம்சாவளியாகும். இது ஸ்பைக் புரதத்தில் உள்ள பிறழ்வைக் கொண்டுள்ளது, இது அதிகரித்த தொற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு ஏய்ப்புக்கு பங்களிக்கக்கூடும். எனவே நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து எளிதில் தப்பிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள்

JN.1 காரணமாக கொரோனா பரவும் விகிதம் அதிகரித்தாலும், அதன் அறிகுறிகள் ஒப்பீட்டளவில் லேசானவை மற்றும் அதிகரித்த மருத்துவமனையில் சேர்க்கும் செய்தி இல்லை. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தலைவலி, இருமல் மற்றும் சில சந்தர்ப்பங்களில், லேசான இரைப்பை குடல் அறிகுறிகள் அடங்கும்.

ஜேஎன்.1 பரவும் தன்மையின் காரணமாக, முன்னெச்சரிக்கையான தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், கோவிட் வைரஸின் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறலாம். எனவே அடிக்கடி கைகளை கழுவுவதௌ, முகக்கவசம் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை முக்கியம்.. இவை தவிர பூஸ்டர்  டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios