Asianet News TamilAsianet News Tamil

கடல் மீன் நல்லதா? குளத்து மீன் நல்லதா? காரணம் தெரிந்தால் அந்தப்பக்கமே போக மாட்டீர்கள்!

விற்பனையகங்களில் கிடைக்கும் மீன்கள் கடல் மீன்கள் தானா? இல்லை ஆற்று மீன்களா? என்கிற கேள்வி பலரிடையே நிலவுகிறது. ஒருவேளை நாம் கடல் மீன்களைத்தான் வாங்கி சமைக்கிறோமா? அல்லது அதில் ஏதாவது வியாபார தந்திரம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. கடல் மீனுக்கும், நம்ம ஊரில் வாங்கும் ஆறு மற்றும் குளத்து மீனுக்கும் அப்படியென்ன வேறுபாடு உள்ளது. இரண்டு வகை மீன்களுக்குமான வேறுபாட்டை எப்படி கண்டறியலாம். விரிவாக பார்க்கலாம்.

Is sea fish good Is pond fish good If you know the reason you will not go there
Author
First Published Sep 15, 2022, 7:46 PM IST

முன்னொரு காலத்தில் கடலோர மாவட்டங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் பெரியளவில் மீன் கடைகள் இருக்காது. ஒரு கி.மீ அளவுக்குள் ஒரு தள்ளுவண்டி கடை அல்லது மீன் விற்பனை நிலையங்கள் இயங்கும். குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கு தான் மீன்களை வாங்குவார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை, கடலோர மாவட்டங்களுக்கு இணையாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மீன் விற்பனையகங்கள் இயங்குகின்றன. வாரத்துக்கு ஒருமுறை என்று மாறி, தினசரி மீன்கள் விற்பனை நடைபெறுகின்றன. விற்பனையகங்களில் கிடைக்கும் மீன்கள் கடல் மீன்கள் தானா? இல்லை ஆற்று மீன்களா? என்கிற கேள்வி பலரிடையே நிலவுகிறது. ஒருவேளை நாம் கடல் மீன்களைத்தான் வாங்கி சமைக்கிறோமா? அல்லது அதில் ஏதாவது வியாபார தந்திரம் இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. கடல் மீனுக்கும், நம்ம ஊரில் வாங்கும் ஆறு மற்றும் குளத்து மீனுக்கும் அப்படியென்ன வேறுபாடு உள்ளது. இரண்டு வகை மீன்களுக்குமான வேறுபாட்டை எப்படி கண்டறியலாம். விரிவாக பார்க்கலாம்.

மீன் விற்பனையாளர்கள் கூறுவது என்ன?

கடல் மீனுக்கும் ஆறு மற்றும் குளத்து மீனுக்கும் என்ன வித்தியாசம் என்று விற்பனையாளர்களிடம் கேட்டால், அவர்கள் பெரிதாக ஒரு வித்தியாசமும் இல்லை. சத்து எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் என்கின்றனர். ஆனால் இதில் ஒளிந்திருப்பது வியாபார தந்திரம் என்பது தான் அவர்களுடைய பதிலாக உள்ளது. ஆறு மற்றும் குளத்து மீன் என்று சொல்லி பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள் பல மாவட்டங்களில் விற்கப்படுகின்றன, அதை சாப்பிட்டால் சக்கையாக இருக்கும், கடல் மீனை விடவும் ருசி குறைவாக இருக்கும் என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அதனால் காசு அதிகம் கொடுத்தாலும் பரவாயில்லை, கடல் மீன்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது என்பது அவர்களுடைய கருத்தாக உள்ளது.

கடல் மீன், குளத்து மீன் வேறுபாடு

கடலில் இருந்து பிடிக்கப்படும் அனைத்து வகையான மீன்களிலும் முள் கொஞ்சம் பெரிதாக இருக்குமாம். அதாவது மீனின் அளவே சற்று பெரிதாக இருக்கும். அதை சமைத்து சாப்பிடும் போது முட்களை தனியாக எடுத்து சாப்பிட ஏதுவாக இருக்கும். ஆனால் குளத்து மற்றும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களில் முள் சிறியதாக இருக்கும். பார்த்து சாப்பிடாவிட்டால் முள் தொண்டையை பதம் பார்த்துவிடும். கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால்,  அதில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் அவசியமான சத்து. ஆனால் குளத்து மற்றும் பண்ணை மீன்களில் சோடியம் வெகு குறைவாக இருக்கும்.  அதே போல கடல் மீன்களில் கால்சியமும் அதிகமாக இருக்கும்.

ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை கண்டு அஞ்சுவது ஏன்..? அச்சுறுத்தும் பின்னணி..!!

இரண்டிலும் சத்துக்கள் உள்ளன

கடல் மீன்கள், குளத்து மீன்கள் இரண்டிலும் தேவையான அடிப்படை சத்துகள் சரிசமமாகவே உள்ளன. கடல் உணவுகள் மற்ற இறைச்சிகளை விடவும் ஆரோக்கியமானது என்று பல ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால் அதே சமயத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து எந்த மீனை சாப்பிட வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்வது மிக்க நல்லது. தமிநாட்டின் உள்மாவட்டமாக இருந்தால், பதப்படுத்தப்பட்ட மீன்கள் தான் கிடைக்கும் என்பது உறுதி. ஆத்து மீனோ, குளத்து மீனோ அல்லது கடல் மீனோ எதுவாக இருந்தாலும், இரசாயன பதப்படுத்துதல் இன்றி சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios