Jaggery Water : இரவு தூங்கும் முன் இந்த ஒரு ஸ்பெஷல் பானத்தை குடிங்க... இந்த நோய்களை விரட்டி அடிக்கும்!
இரவு தூங்க செல்வதற்கு முன்பு வெல்லம் கலந்த ஸ்பெஷல் பானத்தை குடித்தால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் ஆகியவற்றால் நாம் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம். இன்னும் சொல்ல போனால் பலர் 30 வயதில் இருந்து 40 வயதுக்குள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி சிரமப்படுகிறார்கள்.
மோசமான வாழ்க்கை முறையே நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்பதால், அவற்றை சிறிய அளவில் இருக்கும்போதே முறையாக கவனித்தால், ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் நீங்கள் மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தபடியே அவற்றை சரி செய்யலாம் தெரியுமா...? அது எப்படி என்று அறிய தொடர்ந்து படியுங்கள்..
இதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு துண்டு வெல்லத்தை வைத்து ஒரு ஸ்பஷல் பானம் செய்து தூங்க செல்வதற்கு முன் குடியுங்கள். இந்த பானம் உங்கள் உடலில் உள்ள பல்வேறு வியாதிகளை துரத்தியடிக்கும்.
தேவையான பொருட்கள்:
வெல்லம் - 1 துண்டு
ஏலக்காய் - 1
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
ஒரு கிளாஸ் சூடான நீரில் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் அப்படி மூட் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடியுங்கள். நீங்கள் விரும்பினால் இதனுடன் 1 ஸ்பூன் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த பானம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி, எண்ணற்ற நோய்களையும் குணப்படுத்தும்.
இதையும் படிங்க: ஒரு துண்டு வெல்லம் போதும்..சளி, இருமல் முதல் மலச்சிக்கல் வரை அனைத்தையும் விரட்டி அடிக்கும்!
வெல்ல பானத்தின் நன்மைகள்:
கை-கால் வலி மற்றும் குடைச்சல், மூட்டு வலி, பாத வலி மற்றும் எரிச்சல், சோர்வு, ஞாபக மறதி, அஜீரணக்கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, இரத்த சோகை, சரும பிரச்சினைகள், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களை இந்த பானம் நீக்கும். இந்த ஸ்பெஷல் பானத்தை மிதமான சூட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: தொப்பையை குறைக்கணுமா? அப்ப டயட்டில் வெல்லத்தை சேர்த்துக்கோங்க.. அவ்வளவு நன்மைகள் இருக்கு..
வெல்லம் நன்மைகள்: வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம், சர்க்கரை மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முக்கியமாக, சிலருக்கு பருவநிலை மாற்றம் காரணமாக ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அவற்றை குணமாக்க
வெல்லம் பெரிதும் உதவுகிறது. தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவர்கள் வெல்லத்தை பாலில் கலந்து குடித்தால், நல்ல தூக்கம் வரும். அதுமட்டுமின்றி, வெல்லம் வாத நோய், பித்தம், அனீமியா ஆகியவற்றை சரிசெய்யும். மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வுகளில் இருந்து விட பெண்கள் இதை எடுத்து கொள்ளலாம்.
ஏலக்காய் நன்மை: ஏலக்காய், நரம்பு மண்டல ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சிக்கு மிகவும் நல்லது. மற்றும் இது வசனையாகவும் இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D