உண்மையில் பித்தம் ‘வில்லன்’ கிடையாது- அது ஒரு ’ஹீரோ’
தமிழில் மரபு வழி மருத்துவத்தில் பித்தம் 5 வகையாக பிரிக்கப்படுகிறது. இதுதொடர்பான பாதிப்புகளுக்கு வீட்டு வைத்திய முறையில் இஞ்சிச்சாறு மற்றும் வெங்காயச்சாறு பரிந்துரைக்கப்படுகிறது.
இன்றைய காலத்தில் பித்தம் என்றாலே பலரும், அதனால் உடலுக்கு கேடு ஏற்படுவதாக எண்ணுகின்றனர். உண்மையில் பித்தம் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மைகளை சேர்க்கின்றன. உணவு செரிமானம், உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுப்பது, இருதய நலன், கண்பார்வையை காப்பது, சருமப் பாதுகாப்பு உள்ளிட்ட 5 வகை நன்மைகள் பித்தம் மூலம் நமக்கு கிடைக்கின்றன.
பாசகம்
செரிமானப் பை மற்றும் வயிறுக்கு நடுவில் இருக்கும் பித்த அமைப்புக்கு பாசகம் என்று பெயர். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை சரியான முறையில் செரிமானப் படுத்த, இந்த பாசகம் பெரிதும் உதவுகிறதும். இந்திய மரபு வழி மருத்துவ முறையில் பாசகத்தை ‘அக்னி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவில் இருந்து சத்தான பகுதியையும் கழிவையும் பிரிப்பது தான் பாசகத்தின் முக்கிய பணி. மற்ற இடங்களில் அமைந்துள்ள பித்தங்களுக்கும் பாசகம் தான் ஊக்கமளிக்கிறது.
ரஞ்சகம்
இரைப்பையை உறவிடமாகக் கொண்டு இயங்கும் பித்தத்துக்கு ரஞ்சகம் என்று பெயர். நாம் சாப்பிடும் உணவிலுள்ள நீர்ச்சத்துக்களை பிரித்து, அதை ரத்த பயன்பாட்டுக்கு வழங்குவது தான் ரஞ்சக பித்தத்தின் தலையாய பணி. இதன்மூலம் நமக்கு உடலுக்கு தேவையான வெப்பம், நினைவாற்றல், வேலைகளை திறம்படச் செய்வதற்கான திறமை மற்றும் மனக்கட்டுப்பாடு உள்ளிட்டவை போதுமான அளவில் கிடைக்கின்றன
சாதகம்
இருதயம் அமைந்துள்ள பகுதியில் இருக்கக்கூடிய பித்தம் தான் சாதகம். இதன்மூலம் அறிவு, நுண்ணறிவு, தன் நிறைவு, செயல்படுவதற்கான ஊக்கம் உள்ளிட்ட தேவைகள் நமக்கு கிடைக்கின்றன. இது உடலில் எதிர்பாராதவிதமாக அதிகரித்தால், மன அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படும். அடிக்கடி நொறுக்கு தீனி, மாமிச உணவுகள், புளிப்பு சுவை கொண்ட உணவுகளை அதிகளவும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். இதன்காரணமாக சாதக பித்தத்துக்கு அதிகமாக பித்தநீர் சுரக்கும்.
ஆலோசக பித்தம்
கண் பகுதிகளில் இடம்பெற்றுள்ள பித்தம் தான் ஆலோசகம். இது கண்களுக்கு பார்க்கும் சக்தியை தருகிறது. இது கண்களை சுற்றி இருக்கும். கண்களில் உள்ள நரம்புகள் சிறப்பாக செயல்படவும், பார்வையை தெளிவாக காட்டவும் ஆலோசக பித்தம் உதவுகிறது. மனிதனுக்குரிய அறிவைக் கூர்மைப்படுத்துவதிலும் ஆலோசகம் பித்தம் முக்கியத்துவம் பெறுகிறது.\
பிராஜக பித்தம்
சரும பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக இருக்கக்கூடியது தான் பிராஜக பித்தம். இது சருமத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து ஆரோக்கியத்தை வழங்குகிறது. அடிக்கடி எண்ணெய் தேய்த்து குளிப்பது, வைட்டமின் டி பெறுவதற்காக சூரிய ஒளி சருமத்துக்கு கிடைக்கும் வகையில் செயல்படுவது போன்றவற்றின் மூலம் பிராஜக பித்தம் சமநிலைப்படுத்துகிறது. இதை சிறப்பாக செயல்பட வைக்க, அழகு நிலையங்களில் குறிப்பிட்ட பெயரில் ஃபேஷியல்களும் வழங்கப்படுகின்றன.
இஞ்சி முதல் நெல்லிக்காய் வரை- கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 4 பொருட்கள்..!!
பித்த சமநிலை
உங்களிடையே மது மற்றும் புகைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தால், உடலில் பித்தம் அதிகரித்துவிடும். அதேபோன்று அளவுக்கு அதிகமாக காபி, டீ குடிப்பது தினமும் அதிகநேரம் கண்விழித்து கொண்டு சரியாக உறங்காமல் இருப்பது போன்ற பிரச்னைகள் காரணமாகவும் பித்தம் அதிகரித்துவிடும். ஒருவேளை உங்களுக்கு பித்தம் அதிகரித்துவிட்டால், சுக்கு, சீரகம், மல்லி மற்றும் தேன் சேர்த்து தேநீர் தயாரித்து குடித்து வருவது நல்ல பலனை தரும். அதுமட்டுமில்லாமல் தேனி இஞ்சித் துண்டுகளை ஊறவைத்து, 48 நாட்கள் விடாமல் சாப்பிட்டு வந்தாலும் பித்தம் தெளிந்து ஆயுள் அதிகரிக்கும்.