இஞ்சி முதல் நெல்லிக்காய் வரை- கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 4 பொருட்கள்..!!
சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு எல்லாம் வாழ்க்கை முறை கட்டுப்பாடு தேவை. இதை திறம்படச் செய்ய உணவுக் கட்டுப்பாட்டு முக்கிய தேவையாக உள்ளது.
High Cholesterol
நம் உடலுக்கு ஒருமுறை வாழ்க்கைமுறை நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதை குணப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும். அதனால் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பிட்ட நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன், வாழ்க்கை முறையை மேம்படுத்தி நோயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
High Cholesterol
சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், பிபி போன்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த வாழ்க்கை முறைகளில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முக்கிய முயற்சிகள் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டும். அதற்காக சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து மற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில விஷயங்கள் உள்ளன. இவற்றில் நான்கு உணவுகளைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ginger powder
இஞ்சி
நம் நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் இஞ்சி இன்றியமையாத ஒரு சமையல் பொருளாக உள்ளது. அனைத்து விதமான சமையலுக்கும் இதை பயன்படுத்தலாம். இதை சேர்க்கும் போது உணவுகள் நறுமணமும் சுவையும் பெறுகின்றன. அதுமட்டுமில்லாமல் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக இதிலுள்ள பயோ-ஆக்டிவ் கலவைகள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.
Image: Getty Images
வெந்தயம்
கசப்பான சுவையும் குளிர்ச்சியான பண்புகளை கொண்ட வெந்தயமானது பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சைவ சமையல்களுக்கு வெந்தயம் கூடுதலாக சேர்க்கப்படும் மூலப்பொருளாக உள்ளது. இதில் வைட்டமின்-சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டும் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவக்கூடியதாகும். காலையில் வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், விரைவிலேயே கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்.
நெல்லிக்காய்
பல்வேறு வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்பு, ஃபோலேட், ஆண்டிஆக்சிடண்டுகள், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் நெல்லிக்காயில் உள்ளன. இதை தினந்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு, கொல்ஸ்ட்ரால் கட்டுக்குள் வரும். நெல்லிக்காய் சாறு தொடர்ந்து அருந்துவதும் நல்லது. செரிமான பிரச்சனைகளை போக்க நெல்லிக்காய் சாறு மட்டும் அருந்தி வந்தால் போதும். விரைவாகவே பிரச்னை தீரும்.
olive oil
ஆலிவ் எண்ணெய்
மேற்கத்திய பண்பாட்டை கொண்டிருந்தாலும், ஆலிவ் எண்ணெய் மூலம் இந்தியர்களும் நன்றாகவே பயன்பெற முடியும். இயற்கையாகவே இந்த எண்ணெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இது மிகவும் நல்லது. சாலட் போன்றவற்றில் சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டால் போதும். கெட்டக் கொழுப்பு பிரச்னை உடனடியாக கட்டுக்குள் வந்துவிடும்.