Curd: எலும்புகளை பலப்படுத்த தயிரை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
சிறியவர்வள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணும் உணவாக தயிர் இருக்கிறது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது. பழங்காலம் தொட்டே தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் தயிர் ஓர் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது என்பதை தவிர்த்து, பல அளப்பரிய மருத்துவ குணங்களை தயிர் தன்னகத்தே கொண்டுள்ளது.
தயிரில் உள்ள சத்துக்கள்
பாலின் மறுவடிவமான தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக உடல் எடை முதல் எலும்புகளை சீராக்க தயிர் உதவுகிறது. அவ்வகையில் தயிரை எடுத்து கொண்டால் கிடைக்கும் அரிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
தயிரின் நன்மைகள்
தயிரில் இருக்கும் கால்சியம் எலும்புகளின் அடர்த்தியை சமப்படுத்துவதோடு, பலப்படுத்தவும் உதவி புரிகிறது.
தயிரில் கொழுப்புகள் குறைந்த அளவில் இருப்பதால் உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது.
குளிர் காலங்களில் தயிர் சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் வரும் என கூறப்பட்டாலும் தயிர் கோடை காலம் மற்றும் குளிர் காலம் ஆகிய இரு பருவங்களிலும் சாப்பிட ஏற்ற உணவாகும்.
முகப்பரு பிரச்சனை உள்ள நபர்களுக்கு ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக தயிர் விளங்குகிறது. மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் தயிரைக் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
குழந்தைகளுக்கு உணவில் தயிரை சேர்த்து கொடுப்பது மிகவும் நல்லது. இதற்காக காய்கறிகளுடன் தயிரைச் சேர்த்து, சாலட் தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வரலாம்.
நமது உடலுக்குத் தேவையான கால்சியத்தை தயிர் அளிக்கிறது. உடல் சூட்டின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தயிரை வெந்தயத்துடன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும்.
வாழைக்காய் பூரணக் கொழுக்கட்டை செய்ய தெரியுமா? அப்போ இதை படித்து செய்து பாருங்க!
புளித்த தயிரை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி மிருதுவாக ,பளிச்சென தோற்றம் அளிக்கும்.
புற்றுநோயைத் தடுக்கும் திறனும், மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மையும் தயிருக்கு உள்ளது.
தயிர் நல்ல செரிமான சக்தியைத் தரும். சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே 91% தயிர் செரிமானமாகி விடும்.
தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள், குடலில் உருவாகும் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
இரவில் தூக்கம் வராமல் தவிப்பர்கள், தூங்கச் செல்வதற்கு முன்னர்ஒரு கைப்பிடி அளவுத் தயிரை தலையில் தேய்த்தால், தூக்கம் நன்றாக வரும்.