வாழைக்காய் பூரணக் கொழுக்கட்டை செய்ய தெரியுமா? அப்போ இதை படித்து செய்து பாருங்க!
வாருங்கள்! வித்தியாசமான வாழைக்காய் பூரணக் கொழுக்கட்டை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கொழுக்கட்டை என்றால் பருப்பு அல்லது சர்க்கரை பூரணத்தை வைத்து தான் நாம் செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் ரொம்பவே வித்தியாசமாக வாழைக்காய் வைத்து பூரணத்தை செய்து அதில் கொழுக்கட்டை செய்ய உள்ளோம். இதன் சுவை சற்று வித்தியாசமாக அதே நேரம் மிகவும் சுவையாக இருக்கும். இதனை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனவைருக்கும் ஏற்ற ஒரு ரெசிபியாக இருக்கும்.
வாருங்கள்! வித்தியாசமான வாழைக்காய் கொழுக்கட்டை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் -2
- அரிசி மாவு-1 கப்
- கருப்பு உளுந்து-4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
- நெய்- தேவையான அளவு
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க "நுங்கு பாயசம்" சூப்பராக இருக்கும்
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கருப்பு உளுந்து போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக வாசனை வந்த பிறகு மற்றொரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஆற வைத்து விட்டு பின் மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாழைக்காயின் தோலை எடுத்து விட்டு அதனை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்பு , துருவி வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து வதக்கி விட வேண்டும். வாழைக்காய் நன்றாக வெந்த பிறகு உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட்டு பின் அரைத்த கருப்பு உளுந்து பொடியை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு,சுமார் 5 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.
பின் ஒரு பெரிய தட்டில் அரிசி மாவினை போட்டு சிறிது உப்பு மற்றும் நெய் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும் .பின் மாவினை கையில் கொஞ்சம் எடுத்து வட்டமாக தட்டி அதன் நடுவில் நடுவில் சிறிது பூரணம் வைத்துமூடி விட வேண்டும்.
அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு, அதில் இட்லி தட்டுகளின் மேல் கொழுக்கட்டைகளை வைத்து மூடி விட்டு சுமார் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்!ருசியான வாழைக்காய் பூரண கொழுக்கட்டை ரெடி!