இயற்கை முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் தினமும் பின்பற்றி வந்தால் போதும். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
இந்த காலத்துல சர்க்கரை நோய் என்பது பலருக்கும் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. முந்தைய காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே வரும் இந்நோய் தற்போது வயது வித்தியாசமின்று அனைவரையும் வாட்டி வதைக்கிறது. சர்க்கரை நோய் வந்தாலே கூடவே சில உடல் நல பிரச்சினைகளும் வந்துவிடும். நாம் சாப்பிடும் உணவு மற்றும் நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் இரத்த சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உங்களது அன்றாட வாழ்வில் இணைத்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இப்போது இந்த பதிவில் இயற்கை முறையில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில வழிகள் :
1. சீரான உணவு:
நார்ச்சத்து உணவுகள்
இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் விகிதத்தை குறைக்கவும் நார்ச்சத்து பெரிதும் உதவுகின்றது. எனவே இரத்த சர்க்கரை அளவை குறைக்க காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை (அரிசி, இனிப்புகள், வெள்ளை ரொட்டி) குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். டீ, காபியில் சர்க்கரை சேர்க்க வேண்டும். வேண்டுமானால் குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். மெலிந்த புரந்த உணவுகள், நட்ஸ்கள் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக சாப்பிடும்போது உணவை திட்டமிட்டு அளவாக சாப்பிடுங்கள் மற்றும் சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு ஏற்ற உணவு அட்டவணையை பின்பற்ற வேண்டும்.
2. உடற்பயிற்சி:
தினமும் உடற்பயிற்சி செய்வது எடையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்களது உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும். மேம்படுத்தப்பட்ட இன்சுலின் புணர்திறன் தான் உங்களது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை குறைக்கும். எனவே வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவு இயற்கையாக குறைக்க உதவும்.
3. போதுமான தூக்கம் :
இயற்கையாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க போதுமான தூக்கம் மிகவும் அவசியம். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் உடலில் இன்சுலின் உணர் திறன் பாதிக்கப்படும். இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. மேலும் இது குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். ரத்தத்தில் கார்டிசோலின் அளவையும் அதிகரிக்கும் எனவே, ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். போதுமான தூக்கம் குடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
4. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் :
ஆய்வுகள் படி, மன அழுத்தம் உடலில் ரத்த குளுக்கோஸ் அளவை நேரடியாக பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளன. மன அழுத்தத்தால் வெளியிடப்படும் இரண்டு ஹார்மோன்களான கார்டிசோ மற்றும் குளுக்கோன் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வழக்கமான உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
5. நீரேற்றத்துடன் இருங்கள் :
ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஏனெனில் தண்ணீர் தான் சிறுநீர் வழியாக அதிகப்படியான சற்கத்தையை வெளியேற்ற உதவும். ஆய்வுகள் படி, ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா வருவதற்கான வாய்ப்பு குறைவதாக தெரிவிக்கின்றன.
முக்கிய குறிப்பு :
- புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
- சர்க்கரை நோய் அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- சர்க்கரை நோய் பரிசோதனையை தவறாமல் செய்து கொள்ளுங்கள்.
இந்தக் குறிப்பு பொதுவானதே. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தான் உதவும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு இவற்றை பின்பற்றுவது நல்லது.
