Arthritis: முக்கியமான நேரத்துல கூட மூட்டு வலியா? உடனடியாக குறைக்க எளிய தீர்வுகள் இதோ!
சகித்து கொள்ள முடியாத வலிகளில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டுவலி வலியால் அவதிப்படும் நோயாளிகள் பெரும்பாலும் எடை அதிகம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கான வலி நிவாரணியாக சில எளிய வழிகளை இங்கு விரிவாக காணலாம்.
மூட்டுகளில் வலி, வீக்கம், விறைப்பு ஆகியவற்றை அனுபவிப்பர்கள் அதனை முறையாக கவனித்து கொள்ளாவிட்டால் நீண்ட நாள் வலிக்கு ஆளாகுகிறார்கள். உலகம் முழுக்கவே கீழ்வாதம் (osteoarthritis) அதிகரித்து வருகிறது. இதனுடைய அறிகுறிகள் வயதுக்கு ஏற்ப மாறுபடும். சிலருக்கு மரபணு காரணங்களாலும் இந்த மூட்டு வலி ஏற்படலாம். உடல் பருமம் உள்ளவர்களை மூட்டு வலி தாக்குகிறது.
உடல் பருமனாக இருப்பவர்கள், கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டுகளில் அதிக வலி இருக்கும். நோயெதிர்ப்பு அமைப்பு சிதைந்து உடலின் திசுக்களைத் தாக்கும்போது முடக்கு வாதம் ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் தாங்க முடியாத வலி ஏற்படுகிறது.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
உடல் பருமனும் கொழுப்பு திசுக்களும் அதிகரிக்கும்போது உடலில் உள்ள கொழுப்பு செல்கள் சில வேதிப்பொருள்களை வெளியீடு செய்கின்றன. அப்போது சைட்டோகைன்கள் அல்லது புரோ-இன்ஃப்ளமேட்டரி சைட்டோகைன்கள் எனப்படும் சில இரசாயனங்கள் உற்பத்தியாகி உடலின் செயல்பாடு தடுக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.சைட்டோகைன்கள் என்பவை மூட்டுகளில் வீக்கத்தை அதிகரிக்கும் புரதங்கள் ஆகும். முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட நோயாளி அதிக பருமனாக இருந்தால், அவரது உடலில் IL6 மற்றும் பிற சைட்டோகைன்களின் அளவு அதிகமாக இருக்கும். இதுவே கூடுதல் வீக்கம், மூட்டுகளில் அதிக சேதத்தை உண்டாக்குகிறது.
இதையும் படிங்க; bollywood superstar: என்ன தான் பண்ணுவாரு? 57 வயசிலும் சல்மான் கான் பிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா?
சிகிச்சை செய்யலாமா?
இந்த வகை நோயாளிக்கு சிகிச்சையளிப்பது கடினம். மூட்டுவலி உள்ளவர்களுக்கு உடல் பருமன் மற்றொரு பிரச்சனையாக தலையெடுக்கிறது. அவர்களின் சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் கல்லீரலை பாதிக்கிறது. இதனால் விரைவில் அவர்களது கல்லீரல் வேலை செய்வதை நிறுத்துகிறது. இதன்காரணமாக வீரியம் அதிகமுள்ள மூட்டு வலி மருந்துகளை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. ஆகவே மூட்டுவலி சிகிச்சையில் நல்ல பலன்களை அனுபவிக்க உடல் பருமனை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதற்கான எளிய வழிகளை இங்கு காணலாம்.
எடையை குறைங்க பாஸ்!
மூட்டு வலியால் சிரமப்படும் நபர்கள் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவது அவசியம். கீல் வாதம் வந்தவர்களுக்கு ரன்னிங், ஜாகிங், சைக்கிளிங் ஆகியவை செய்வதால் வலி அதிகமாகும். இது மூட்டுகளில் அழுத்தத்தையும் வலியையும் அதிகரிக்கும். ஏரோபிக் அல்லது ஆக்ஸிஜன் ஏற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இதனால் உடல் பருமனை குறைக்கலாம்.
ஓட முடியாது ஆனால் நீந்தலாமே!
உடல் எடையை குறைக்க மெதுவான அல்லது வேகமான நடைப்பயிற்சியை செய்வது நல்லது. அத்துடன் நீச்சல் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். வெதுவெதுப்பான நீர் உள்ள நீச்சல் குளத்தில் இதனை செய்யலாம். உடலின் மேற்புற பகுதிகளை வலுவாக்க பளு தூக்குதலை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 2 முதல் 3 கிலோ எடையுள்ள டம்பல்ஸை தூக்கி உடற்பயிற்சி செய்யலாம்.
அளவாக உண்ணுங்கள்!
நம் முன்னோர் உணவே மருந்து என சொல்வர். குறைந்த கொழுப்பு உடைய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக புரத உணவினை எடுத்து கொள்ள வேண்டும். சிவப்பு நிற மாமிசத்தை தவிர்க்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சில வகை மீன்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவை அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டவை. பழங்கள், காய்கறிகளைத் தவிர, ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். எடையை குறைப்பதுடன் ஆலிவ் எண்ணெய் கீல்வாத வலியிலிருந்தும் விடுபட வைக்கும்.
இதையும் படிங்க; Beauty: கையில் சுருக்கம் வந்து வயசான மாதிரி தெரியுதா? இளமையா தெரிய இதைப் பண்ணுங்க!
வலி நிவாரணம்!
மூட்டுவலியால் அவதிப்படும் நோயாளியின் எடையை குறைக்கும் செயல்முறை எளிதில் நடந்துவிடாது. உடனடி எடை குறைப்பு நிகழாததால் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்யத் தயங்குகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு சம்பந்தபட்டவருக்கு குடும்ப உறுப்பினர்களும், மருத்துவர்களும் வழிகாட்ட வேண்டியது அவசியம். மூட்டு வலியால் அவதிபடும் ஒருவர் தன்னுடைய உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தை குறைப்பார் எனில் 3 முதல் 4 மாதங்களில் ஏற்படும் வலியின் அளவு 20 முதல் 30 சதவீதம் குறையும். விரைவில் எடையை குறைத்து வலியில் இருந்து விடுபடுங்கள்