MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Beauty: கையில் சுருக்கம் வந்து வயசான மாதிரி தெரியுதா? இளமையா தெரிய இதைப் பண்ணுங்க!

Beauty: கையில் சுருக்கம் வந்து வயசான மாதிரி தெரியுதா? இளமையா தெரிய இதைப் பண்ணுங்க!

ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாள் வரும்போதும் இன்னொரு வயது கூடுதே என்ற வருத்தம் இல்லாதவர்கள் வெகு குறைவு. அவர்களால் வயதை குறைக்கமுடியாவிட்டாலும், உடலை முறையாக பராமரித்து தோற்றத்தை மெருகூட்டமுடியும். அதற்கான எளிய வழிகளை இங்கு காணலாம்.

1 Min read
maria pani
Published : Dec 27 2022, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
15
Skin care

Skin care

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்திற்கு வித்திடுகின்றன. சிலருக்கு முகம் இளமையாக தோன்றினாலும், கைகள் சுருக்கங்கள் விழுந்து காணப்படும். இதனால் கைகளை வெளியே காட்டிக் கொள்ளவே வெட்கப்படுவார்கள். அவர்களது கரங்களை தொடர்ந்து பராமரித்தாலே போதும் சுருக்கங்களை போக்கிவிடலாம். 

25
moisturizer

moisturizer

மாய்ச்சரைசர் யூஸ் பண்ணுங்க! 

ஆரோக்கியமான சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தங்களுடைய சருமத்தில் மாய்ச்சரைசரை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. சருமத்தின் மீது போதுமான ஈரப்பதம் இல்லாத காரணத்தால் கைகளில் சுருக்கம் ஏற்படுகிறது. சுருக்கம் இல்லாத சருமத்தினை பெற மாய்ச்சரைசர் பயன்படுத்துங்கள். 

35
Hand wrinkles

Hand wrinkles

இயற்கையை நம்புங்க! 

சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெற கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக, கீழிருந்து மேல் செல்லும் வகையில் மசாஜ் செய்து வர கையில் உள்ள சுருக்கங்கள் விரைவில் மறையும். 

 

45
water

water

நிறைய தண்ணீர் குடியுங்கள்! 

போதுமான அளவு தண்ணீர் அருந்துவதால் பல நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். இதனால் சருமம் ஆரோக்கியமாக காட்சியளிப்பதோடு, கைகளில் சுருக்கங்கள் இன்றி இளமையாகவும் இருக்க முடியும். 

 

55
Asianet Image

சருமத்தை காக்கும் சன்ஸ்கீரின் 

சூரியனிலிருந்து வெளிவரும் சில கதிர்கள் நம் சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தோல் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் அதிகமாகும். ஆகவே வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமத்தினர் ஃபோம் டைப் சன்ஸ்கிரீன், மென்மையான சருமத்தினர் லோஷன் டைப் சன்ஸ்கிரீன், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் ஜெல் டைப் சன்ஸ்கிரின் உபயோகிக்கலாம். தொடர்ந்து சரும பராமரிப்பில் கவனம் செலுத்தினால் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றத்தினை பெறலாம். 

About the Author

maria pani
maria pani
 
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved