Asianet News TamilAsianet News Tamil

Migraines: ஒற்றைத் தலைவலியை ஒரு நொடியில் குணமாக்கும் வீட்டு வைத்தியம் இதோ!

ஒற்றைத் தலைவலியை சாதாரண தலைவலி தான் என சிலர் இதனைத் தீர்க்கும் மருத்துவ ஆலோசனைகளை பெறாமல் இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். ஒற்றைத் தலைவலியைப் போக்குவதற்கு அதிக கவனம் தேவை. மேலும், இதனை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே குணப்படுத்த முடியும்.

Home Remedies to Cure Migraines in an Instant!
Author
First Published Jan 25, 2023, 5:13 PM IST

இன்றைய காலக்கட்டத்தில் ஒற்றைத்  தலைவலி என்ற பேச்சு சற்று அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது. இருப்பினும், ஒற்றைத் தலைவலியை சாதாரண தலைவலி தான் என சிலர் இதனைத் தீர்க்கும் மருத்துவ ஆலோசனைகளை பெறாமல் இருக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். ஒற்றைத் தலைவலியைப் போக்குவதற்கு அதிக கவனம் தேவை. மேலும், இதனை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே குணப்படுத்த முடியும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி என்பது நெற்றியின் ஒரு புறத்தில் மட்டுமே ஏற்படும் வலி மற்றும் துடிப்பது போன்ற உணர்வு மெதுவாகத் தொடங்கும். பிறகு இந்த வலி அதிகரித்து, அதிகபட்ச தீவிரத்தை அடைந்து விடும். தலையை ஒரு சுழற்று சுழற்றி விட்டுத் தான் இந்த தலைவலி குறையத் தொடங்கும். சில சமயங்களில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உணர்வுகளும் தோன்ற வாய்ப்புண்டு. இருப்பினும், இவையெல்லாம் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதன் மூலமோ அல்லது தூங்குவதன் மூலமோ தானாகவே குறைந்து விட வாய்ப்புள்ளது.

ஒற்றைத் தலைவலிக்கான காரணம்

சூழல் மற்றும் மரபு ஆகிய இரண்டு அம்சங்களும் தான் ஒற்றைத் தலைவலியை உண்டாக்க மிக முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. ஆகவே, முடிந்த அளவிற்கு நம்மைச் சுற்றியுள்ள சூழலை நிம்மதியாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் உடனடியாக நம்மை நாமே ரிலாக்ஸ் செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால், ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட நேரிடும்.

Daytime sleepiness: பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

வீட்டு வைத்தியம்

ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த வீட்டு வைத்தியம் என்றால் அது இஞ்சி தான். இஞ்சியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி12, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, போன்ற சத்துக்களும் நிரம்பியுள்ளது. சோடியம், இரும்புச்சத்து, கால்சியம் ,பொட்டாசியம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை போன்றவையும் இஞ்சியில் நிறைந்து காணப்படுகிறது. இஞ்சியைக் கொண்டு எப்படி ஒற்றைத் தலைவலியை சரி செய்யலாம் என்பதை இப்போது காண்போம். 

செய்முறை

முதலில் இஞ்சியின் மேற்புறத்தில் இருக்கும் தோலை நன்றாக சீவி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வடிகட்டியதும், இதனை ஒற்றைத் தலைவலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் போதும். ஒற்றைத் தலைவலி முற்றிலும் குணமடைந்து விடும். ஒருவேளை தலைவலி குறையாமல் அதிகரித்து வந்தால், இஞ்சியை நன்றாக அரைத்து, இஞ்சி விழுதினை தலையில் பத்து போட வேண்டும்.

இந்த ஒற்றைத் தலைவலியை ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால், இதன் விளைவாக எதிர்காலத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios