உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருகிறது என்றால் அதற்கான காரணங்கள் என்ன என்றும், அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
விக்கல் என்பது நம் அனைவருக்கும் வரும் ஒரு இயற்கையான அனுபவம். விக்கல் ஏற்படுவதற்கு நம்முடைய டையாஃபிராம் தசைகள் திடீரென சுருங்குவது காரணம். விக்கல் வரும்போது சத்தம் வருகிறது. அதற்கு காரணம் நமது குரல் நாண்கள் சிறிது நேரத்தில் மூடப்படுவதால் தான்.
பொதுவாகவே விக்கல் சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்குள்ளே தானாகவே நின்றுவிடும். ஆனால் விக்கல் மீண்டும் மீண்டும் வந்தாலோ அல்லது 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தாலோ அது நல்லதல்ல, கவலைக்குரிய விஷயம். அது உடலில் இருக்கும் பல நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். உங்களுக்கு விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவர் அணுகி அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
விக்கல் வர காரணங்கள்:
- மிகவும் வேகமாக சாப்பிடுவது அல்லது குடிப்பது
- சோடா, மது அல்லது ஹார்ட் ரிங்ஸ் போன்ற பானங்களை குடிப்பது
- வயிற்றில் வாயு இருத்தல்
- அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது
- சில மருந்துகளின் விளைவுகள்
- அதிகப்படியான மன அழுத்தம் அல்லது உணர்ச்சி ரீதியாக உற்சாகமாக இருத்தல்
அடிக்கடி விக்கல் ஏற்பட காரணங்கள்:
- ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
- நரம்பியல் பிரச்சினைகள்
- தனிமை பதட்டம் மற்றும் மனசோர்வு
- தூக்கமின்மை, அதிகப்படியான சோர்வு மற்றும் நினைவாற்றல் செயல்பாடு குறைதல்
- எடை இழப்பு, நீரிழப்பு மற்றும் சாப்பிடுவதில் சிரமம்
- காயங்கள் தாமதமாக குணமடைதல் மற்றும் சில அறுவை சிகிச்சைகள்
- இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகள்
அடிக்கடி விக்கல் வருவதை நிறுத்த சில குறிப்புகள்:
- மெதுவாக தண்ணீர் குடிக்க வேண்டும்
- மூச்சை பிடித்து மெதுவாக விட வேண்டும்
- சர்க்கரை சாப்பிடலாம் அல்லது எலுமிச்சையை வாயில் வைத்து கடிக்கலாம்
- ஒரு காகிதப் பையில் மெதுவாக சுவாசிக்க வேண்டும்
- தொண்டையை மெதுவாக தடவ வேண்டும் அல்லது கண்களை தேய்க்க வேண்டும்
- அக்குபஞ்சர் நல்லது
- முழங்கால்களை மார்பில் வைத்து முன்னோக்கி சாய்க்க வேண்டும்.
48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் நீடித்தால் என்ன?
பெரும்பாலான நேரங்களில் விக்கல் சிறிது நேரத்திற்குள் தானாகவே நின்று விடும். ஆனால் உங்களுக்கு விக்கல் வந்தால், அது சுமார் 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்தால் அதற்கு கீழே கொடுக்கப்பட்ட சில உடல்நிலை பிரச்சனைகள் தான் காரணம். அவை:
- மூளை மற்றும் நரம்பு பிரச்சனைகள்
- இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள்
- செரிமான அமைப்பு பிரச்சனைகள்
- புற்றுநோய்
உங்களுக்கு 48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் நிற்காமல் தொடர்ச்சியாக வந்தால் தூங்குவது, சாப்பிடுவது மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதுதவிர மார்பு வலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் நரம்பு பலவீனம் பூஞ்ச அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு :
விக்கலை போக்க பயமுறுத்துவார்கள் அல்லது அதிர்ச்சி தரும் விஷயத்தை சொல்லுவார்கள். ஆனால் இப்படி செய்வது வேலை செய்யும் என்றாலும், சில சமயங்களில் இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். ஆகவே, இது மாதிரியான காரியங்கள் செய்வதை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது.
