குழந்தைகளுக்கு ஏற்படும் மாரடைப்பு : இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவை..
திடீர் நினைவு இழப்பு, சோர்வு, மார்பில் அசௌகரியம், ஒழுங்கற்ற சுவாசம் அல்லது உடல் செயல்பாடுகளின் போது மயக்கம் ஆகியவை இதயத்தில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
குழந்தைகளில் திடீர் மாரடைப்பு ஏற்படுவது அரிதானது நிகழ்வு தான். பெரும்பாலும் பிறவி இதயக் குறைபாடுகள் அல்லது மரபணு பிரச்சனைகள் ஆகியவை காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது. திடீர் நினைவு இழப்பு, சோர்வு, மார்பில் அசௌகரியம், ஒழுங்கற்ற சுவாசம் அல்லது உடல் செயல்பாடுகளின் போது மயக்கம் ஆகியவை இதயத்தில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். மேலும் அவை மருத்துவ அவசரநிலையாக கருதப்பட வேண்டும்.
ஒரு இளம் குழந்தை தனது மார்பில் படபடப்பை அனுபவிக்கலாம். அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் இருக்கலாம், சோம்பலாக உணரலாம். குழந்தைகள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்த வேண்டும். வெளியே சென்று விளையாட வேண்டும். சரியான ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் இதயத்தை ஏதேனும் அசாதாரணங்கள் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
மனிதனை அமைதியாக கொல்லும் ஆபத்தான நோய்கள்.. இந்த எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காம இருக்காதீங்க..
ஆரோக்கியமான குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவது சாத்தியமா?
குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதானது. சிக்கலான இதய நோய் அல்லது கடுமையான நோய்த்தொற்றுகள் உள்ள மோசமான நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படலாம். இருப்பினும், வெளிப்படையாக ஆரோக்கியமான குழந்தைகளில் திடீர் இதயத் தடுப்பு மிகவும் பொதுவாக இதயத்துடிப்பு தொடர்பாக ஏற்படலாம்.
குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் குழந்தை இருதயநோய் நிபுணர் டாக்டர் சுப்ரதிம் சென் இதுகுறித்து பேசிய போது “ அசாதாரண தாளங்களால் இதயம் மிக வேகமாக அல்லது மிக மெதுவாக துடிக்கலாம், இவை இரண்டும் உடலுக்கு இரத்தத்தை திறம்பட செலுத்துவதைக் குறைக்கின்றன. இதய தசைக்கு, விரைவான தாளக் கோளாறுகள் டாக்யாரித்மியாஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்த இதய பிரச்சனைகள் உயிருக்கு ஆபத்தானவை," என்று தெரிவித்தார்.
குழந்தைகளில் திடீர் இதயத் தடுப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்னென்ன?
திடீரென்று சுயநினைவு இழப்பு, குழந்தைக்கு அரித்மியா இருப்பதற்கான முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். படப்படப்பு, சீரற்ற இதயத் துடிப்புகள். 4-5 வயதுக்கு மேற்பட்ட அறிகுறிகள் பற்றி தெரிவிக்கலாம். எனவே இதயத்துடிப்பு கோளாறுகள் உள்ள இளைய குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், சோம்பல் ஆகியவை ஏற்படலாம். அதன்படி, திடீர் சுயநினைவு இழப்பு, தீவிர சோர்வு, மார்பு அசௌகரியம், ஒழுங்கற்ற சுவாசம் மற்றும் உடல் செயல்பாடுகளின் போது மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சரியான நேரத்தில் கண்டறிதல், உடனடி நடவடிக்கை, அவசரகால சேவைகளை அழைப்பது, இருதய நுரையீரல் புத்துயிர் (CPR) தொடங்குதல். ஆகியவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.குழந்தைகளிடம் மாரடைப்பை தடுக்க, வழக்கமான உடல் செயல்பாடுகளின் மூலம் இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுதல், சமச்சீர் உணவு முக்கியமானது. குழந்தைகளுக்கான வழக்கமான பரிசோதனைகள் அடிப்படை இதய நிலைகளை முன்கூட்டியே கண்டறிய உதவும். இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தான இதய தாள அசாதாரணத்தின் முதல் ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம். ஆபத்து அறிகுறிகளைக் கண்டறிந்து இதயத் தடுப்பு அபாயத்தில் உள்ள நோயாளிகளைக் கண்டறிவது அவசியம். உடனடி சிகிசை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
- adrenaline dose in cardiac arrest
- cardiac arrest
- cardiac arrest (symptom)
- cardiac arrest in children
- cardiac arrest in infant
- cardiac arrest in kids
- cardiac arrest in telugu
- cardiac arrest symptoms in covid
- child cardiac arrest
- pediatric cardiac arrest
- sudden cardiac arrest
- sudden cardiac arrest causes
- sudden cardiac arrest death
- sudden cardiac arrest in athletes
- sudden cardiac arrest in hindi
- teens cardiac arrest
- what is a cardiac arrest