நீங்கள் வீட்டில் தனிமையில் இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று இங்கு காணலாம்.

மாரடைப்பு என்பது எல்லா வயது வயதினறுக்கும் வரும் என்பதை சமீபகால மரணங்கள் நமக்கு சொல்லுகின்றது. ஒருவருக்கு மாரடைப்பு வரும்போது நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்படும். அதுவும் அந்த வலியானது இடது கை, தோள்பட்டை மற்றும் முதுகு வரை அந்த வலி பரவும். மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இவற்றின் அறிகுறிகள். நெஞ்சு வலியுடன் இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம்.

ஆனால் நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால், உதவிக்கு யாரும் இல்லை என்றால், உங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள சில எளிய வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :

- மாரடைப்பு ஏற்படும் போது பதட்டம், பயம் வருவது இயல்பானது தான். ஆனால் கவனமாக இருந்து விரைவாக செயல்படுவது மிகவும் அவசியம்.

- எனவே மாரடைப்பு வந்தால் பதட்டப்படாமல் முதலில் அமைதியாகவும், நிதானமாகவும் வசதியான நிலையில் அமருங்கள்.

- இரத்தில் தேவையான அளவு ஆக்சிஜனை பராமரிக்க மெதுவாக சுவாசிக்க வேண்டும்.

- எந்தவித உடல் செயல்பாடுகளையும் செய்யாதீர்கள். அதாவது எதையும் குடிக்க முயற்சிக்காதீர்கள். இல்லையெனில் அது நிலைமையை மேலும் மோசமாகிவிடும்.

- உங்களுக்கு ஏற்கனவே மாரடைப்பு பிரச்சனை இருந்தால் அவசர எண்ணை கையில் வைத்துக் கொள்ளுங்கள். மாரடைப்பு வந்தால் உடனே ஆம்புலன்ஸை அழைக்கவும் அல்லது உதவியை நாடுங்கள்.

- காற்றை சுவாசிக்க வீட்டின் கதவு, ஜன்னல்களை திறக்க முயற்சி செய்யுங்கள்.

இருமல் சிகிச்சை :

மாரடைப்பு வந்தால் இருமல் சிகிச்சை மூலம் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதற்கு முதலில் மூச்சை நன்கு உள்ளெழுத்து பிறகு வலிமையாக இரும வேண்டும். ஒவ்வொரு நீங்கள் இரும்பும் முன் நன்றாக மூச்சை இழுத்து விடவும். இப்படி தொடர்ந்து செய்தால் இதயம் தொடர்ந்து துடிக்கும். இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படும். இதயமும் சீரான முறையில் இயங்கும். மருத்துவ உதவி கிடைக்கும் வரை உங்களது உயிரை நீங்கள் காக்கலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள் :

- மார்பில் குறிப்பாக மையப்பகுதியில் சில நிமிடங்களுக்கு மேல் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் வலி

- கழுத்து, கைகள், முதுகு, தாடை அல்லது வயிறு போன்ற இடங்களில் வலி ஏற்படுதல்

- மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல்

- குளிர் வியர்வை, குமட்டல், வாந்தி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும்

இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.