சாப்பிட்ட பின் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா..? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது..?
சாப்பிடும் முன், சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தண்ணீர் நாம் உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஒருவரால் நாள் முழுக்க சாப்பிடாமல் கூட இருக்க முடியும், ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்கவே முடியாது. உங்களுக்கு தெரியுமா தண்ணீரானது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், தினமும் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும்? எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? குறிப்பாக சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? போன்ற பல கேள்விகள் நமக்குள் எழும்.
சாப்பிடுவதற்கு முன், சாப்பிடும் போது அல்லது சாப்பிட பின் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்படி குடிப்பது ஆபத்து என்று சிலர் கூறுகின்றனர். எனவே, சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்..
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிக்கும் நபரா நீங்கள்? ஜாக்கிரதை..சிக்கலில் சிக்குவீர்கள்..!!
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நல்லதா?
சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் ஹைட்ரேட் ஆகுவதுமட்டுமின்றி, சாப்பிடுவதற்கு செரிமான அமைப்பை செய்கிறது மற்றும் உடலை நேரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால், வயிற்றில் முழுமையான உணர்வை உண்டாக்கி, அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்கிறது. மேலும், உடலில் நீரேற்றம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, நீங்கள் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் இவ்வளவு நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.
இதையும் படிங்க: தண்ணீர் குடிக்காம இருக்க முடியுமா? ஆனா 'இந்த' உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீங்க...!!
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா?
பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த பழக்கம், உணவை நன்கு விழுங்குவதற்கும், செரிமானத்திற்கும் உதவுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் வாய் மற்றும் தொண்டையில் வறட்சியைத் தடுப்படுகிறது. இருந்த போதிலும், சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்து, உணவின் செரிமானத்தை தடுக்கிறது. ஆனால் உங்களுக்கு தேவையென்றால், சிறிதளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கலாமா?
நாம் சாப்பாட்டுக்குப் பின் தண்ணீர் குடிப்பது பல நன்மைகளை கொண்டுள்ளது. இதனால் வாயில் மீதமுள்ள உணவுத் துகள்களைக் நீக்கவும், வாய்வழி சுகாதாரத்தை உறுதி செய்யவும், பல் பிரச்சனைகளைத் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது, செரிமானப் பாதை வழியாக உணவை சீராகச் செல்லவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இருந்த போதிலும், சிலர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், உடல் எடை அதிகரிப்பு அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கும் என்று எண்ணி தண்ணீர் குடிப்பதில்லை. உங்கள் தேவையென்றால், நீங்கள் சாப்பிட்ட பின் மிதமான அளவு தண்ணீர் குடிப்பது கூட நல்லது.