தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை இங்கு காணலாம். 

நம்முடைய அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி செய்வதை இணைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ஸ்கிப்பிங் ஒரு சிறந்த உடல் பயிற்சியாக கருதப்படுகிறது. தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும்.

குறிப்பாக உடல் எடை இழப்பு, இதய ஆரோக்கியம், தசை வலிமை உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும். இதுதவிர, மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஒரு சக்தி வாய்ந்த முழு உடற்பயிற்சியாகவும் இது அமைகிறது. எனவே தினமும் காலையில் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :

1. உடல் எடையை குறைக்க :

பலர் உடல் எடையை குறைக்க விரும்புகிறார்கள். ஆனால் நேரமின்மையால் உடல் எடையை குறைப்பதற்கான பயிற்சிகளை செய்ய முடியாமல் போகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் சுமார் 200-300 கலோரிகள் எரிக்கப்படும் இது விரைவான எடை இழப்பை ஊக்குவிக்கும்.

2. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :

தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

3. எலும்புகளை வலுப்படுத்தும் :

தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். இதனால் எலும்பு முறிவு, எலும்பு பலவீனம் ஏற்படும் அபாயம் குறையும்.

4. தசைகளை வலுப்படுத்தும் :

இந்த பயிற்சியானது கால்கள், தொடை, வயிறு மற்றும் தோள்களின் தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

5. மன அழுத்தம் மற்றும் பதட்டம் :

மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்த ஸ்கிப்பிங் பயிற்சி உதவுகிறது. ஏனெனில் இது மகிழ்ச்சி ஹார்மோனை வெளியிடுகிறது.

6. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் :

தினமும் ஸ்கிப்பிங் செய்தால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கலாம்.

7. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் :

தினமும் ஸ்கிப்பிங் செய்வது தசைகளை வலுப்படுத்தும். மேலும் நாள் முழுவதும் ஆற்றலை வழங்கி சோர்வை தடுக்கிறது. முக்கியமாக உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.